அண்ணன்களுக்கு போட்டியாக களமிறங்கிய தங்கை..சிவகுமார் வீட்டில் மற்றொரு கலை வாரிசு! பார்வதியாக நடிப்பில் மின்னிய பிருந்தா
Nov 28, 2024, 06:55 PM IST
சிவகுமார் குடும்பத்தில் மற்றொரு கலை வாரிசாக அவரது மகள் பிருந்தா, மேடை நாடகத்தில் பார்வதியாக நடிப்பில் கலக்கியுள்ளார். இதன் மூலம் அண்ணன்களுக்கு போட்டியாக களமிறங்கிய தங்கை என ரசிகர்களை கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் சிவக்குமார். தற்போது நடிப்பில் இருந்து அவர் ஒதுங்கியிருக்கும் நிலையில் சினிமா, கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற் வருவதுடன், சொற்பொழிவும் ஆற்றி வருகிறார். இவரது மகன்களாக சூர்யா, கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக கலக்கி வருகிறார்.
பார்வதியாக நடிப்பில் மின்னிய பிருந்தா
கலை குடும்பத்தை சேர்ந்த பிருந்தா சினிமாவில் ஆன் ஸ்கிரீனில் இல்லாவிட்டாலும், பின்னணி பாடகியாக கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார். அத்துடன் முறையாக பரதநாட்டியம் கற்றவராகவும் பிருந்தா உள்ளார். இதையடுத்து தற்போது மேடை நாடகத்தில் பார்வதியாக தோன்றி நடிப்பில் மின்னியுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'கருணை கடல் கந்தவேல்' என்கிற டான்ஸ் ட்ராமாவை கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் இயக்கி இருந்த நிலையில், அதில் பார்வதி தேவியாக பிருந்தா நடித்துள்ளார். பழைய ட்ராமாவின் புகைப்படங்கள் தற்போது பகிரப்பட்டிருக்கும் நிலையில் அதை பலரும் பார்த்து பிருந்தாவிடம் இருக்கும் திறமையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்
பாடகியாக பிருந்தா, பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், ராட்சசி, ஓ2 போன்ற படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அதேபோல் பாலிவுட் படமான பிரம்மாஸ்திரம் படம் தமிழ் பதிப்பில், நடிகை ஆலியா பட்டுக்கு டப்பிங் பேசியதும் இவர்தான்.
நடிப்புக்கு நோ சொன்ன பிருந்தா
முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் 2004இல் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் மாதவன் ஜோடியாக நடிக்க பிருந்தாவுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது நடிப்பு ஒத்து வராது எனக் கூறி பிருந்தாவின் தந்தையும், நடிகருமான சிவக்குமார் சான்ஸை நிராகரித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பிருந்தாவும் அந்த சமயத்தில் நடிக்கும் எண்ணத்தில் இல்லை என்றே சில பேட்டிகளில் கூறியுள்ளார்.
தற்போது திருமணமாகி குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் பிருந்தா, மேடை நாடகத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எட்டாம் வகுப்பில் ஏற்பட்ட ஆசை
தான் பாடாகியாக ஆனது பற்றி பிருந்தா அளித்த பேட்டியில், "எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான், பாடும் ஆசை இருப்பதே எனக்கு தெரிந்தது. பள்ளி நிகழ்ச்சியில் நிறைய பேர் பாடிட்டு இருந்தாங்க. சிலர் பாடுவதை கேட்கும் போது, நாமும் படலாம் என தோன்றியது.
முதன் முதலில் மேடையில் ஏறி, ‘போவோமா ஊர்கோலம்’ பாடல் தான் பாடினேன். அதுக்கு அப்புறம் தான் கர்நாடக இசை கத்துக்கொண்டேன். 10 கீர்த்தனை வரை கத்துக்கிட்டேன். நடிப்பு பற்றி நான் பெரிதாக யோசித்தது இல்லை. ரேவதி மேடம் படங்களை விரும்பி பார்ப்பேன்.
சின்ன வயதில் என்னிடம் நீ என்ன ஆகப் போகிறாய் என கேட்ட போது, ‘நான் ரேவதி ஆகப்போகிறேன்’ என்று தான் கூறினேன். நதியாவையும் பிடிக்கும். ராதிகா அக்காவை பிடிக்கும். இவர்களை எல்லாம் பிடிக்கும், ஆனால், நடிக்கும் ஆசை வந்ததில்லை.
முதலில் கார்த்திக ராஜா இசையமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் பள்ளியில் படித்து கொண்டு இருந்ததால் மறுக்க நேரிட்டது. எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தை நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தேன். பாடகியாக சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்றே விரும்பினேன்" என்றார்
டாபிக்ஸ்