தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Karthik Raja: ரஜினி, கமல், அஜித், விஜய்..! கார்த்திக் ராஜா இசையமைத்த வேற லெவல் பாடல்கள்

HBD Karthik Raja: ரஜினி, கமல், அஜித், விஜய்..! கார்த்திக் ராஜா இசையமைத்த வேற லெவல் பாடல்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 29, 2024 10:00 AM IST

ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த் என டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கும் கார்த்திக் ராஜா வேற லெவல் பாடல்கள் கொடுத்துள்ளார். 90ஸ் காலகட்டத்தில், இசையமைப்பில் இவர் செய்திருக்கும் மாயஜாலம் பற்றி 2K, ஜென் இசட் கிட்ஸ்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை

கார்த்திக் ராஜா இசையமைத்த வேற லெவல் பாடல்கள்
கார்த்திக் ராஜா இசையமைத்த வேற லெவல் பாடல்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

90ஸ் காலகட்டத்தில், இசையமைப்பில் இவர் செய்திருக்கும் மாயஜாலம் பற்றி 2K, ஜென் இசட் கிட்ஸ்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. யுவன் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே அறிமுகமான கார்த்திக் ராஜா ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவராக உள்ளார்.

முறையான இசை பயிற்சி

இசைஞானியின் மகனாக இருந்தாலும் முறையாக இசை பயிற்சி பயின்றவராக இருந்துள்ளார் கார்த்திக் ராஜா. டிரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில், முக்கியமாக பியானோவில் மேற்கத்திய பாரம்பரிய இசையில் முறையான பயிற்சி பெற்றார். பின்னர் டி.வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் மலையாள இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கர்நாடக இசைப் பயிற்சியும் பெற்றார். இளம் வயதில், கார்த்திக் ராஜா அடிக்கடி தனது தந்தையுடன் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரஜினிக்கு முதல் கம்போசிங்

கார்த்திக் ராஜா இசையமைத்த முதல் பாடலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாண்டியன் படத்தில் இடம்பிடித்த பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்ய லாலா என்ற பாடலாகும். சிறந்த மெலடி பாடலான இது ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக உள்ளது.

இந்த பாடலை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த தனது படங்களில் பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கார்த்தி ராஜாவுக்கு வழங்கினார். அப்படி கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்த படங்களாக ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, விஜயகாந்த் நடித்த சக்கரை தேவன், சத்யராஜின் சூப்பர் ஹிட் படமான அமைதிப்படை என அடுக்கி கொண்டே போகலாம்.

ராம்கி நடித்த, எனக்கொரு மகன் பிறப்பான் படம் மூலம் முழு இசையமைப்பாளராக அறிமுகமானார் கார்த்திக் ராஜா.

தொடர்ந்து அஜித் - விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்துக்கு இவர் தான் இசையமைத்தார். இந்த படத்தில் இடம்பிடித்த வீசும் காற்றுக்கு என்ற அற்புதமான மெலடி பாடலை தனது தங்கை பவதாரணி குரலில் பாட வைத்திருப்பார்.

கமல் படத்துக்கு இசை

கமல்ஹாசன், பிரபுதேவா, செளந்தர்யா, ரம்பா, வடிவேலு, எம்எஸ் விஸ்வநாதன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து சூப்பர் ஹிட் முழு நீள காமெடி படமாக இருந்த காதலா காதலா படத்துக்கு இசையமைத்தது கார்த்திக் ராஜா தான். காசுமேல என்ற கானா பாடல் முதல் லைலா லைலா மெலடி வரை பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றன.

கார்த்திக் ராஜாவுக்கு ஆல்பமாக ஹிட் அடித்த பாடல்களில் முக்கிய படமாக சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா, மீனா, மகேஸ்வரி நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் படமாகும். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வேறு ரகமாக இருந்ததோடு, அதை காட்சிப்படுத்திய விதமும் அருமையாக இருக்கும்.

அதேபோல் பார்த்திபன் இயக்கத்தில் இவர் இசையமைத்த குடைக்குள் மழை படமும் பாராட்டை பெற்றது. 

பிற மொழி படங்கள்

எனிதிங் ஃபார் யூ என்ற ஆங்கில திரைப்படத்துக்கும் இசையமைத்திருக்கும் கார்த்திக் ராஜா தமிழ், இந்தியில் ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார். அதேபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

சினிமாக்களில் இசையமைப்பதை காட்டிலும் லைவ் கன்சர்டில் அதிக கவனம் செலுத்தி வரும் கார்த்திக் ராஜா, அதில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

கார்த்திக் ராஜா இசையமைப்பில் புதிய படமாக மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுவரை 50க்கு மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்திருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.