தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Suriya And Karthi Sister Offer To Play Simran Role Opposite To Madhavan In Kannathil Muthamittal Movie

Brindha Sivakumar: மாதவன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு! நோ சொன்ன சூர்யா தங்கை பிருந்தா - காரணம் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 23, 2024 06:56 PM IST

மாதவன் ஜோடியாக சிம்ரன் நடித்த வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பதை காட்டிலும், பாடகியாக இருப்பதையே விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணன்கள் சூர்யா, கார்த்தியுடன் பிருந்தா சிவக்குமார்
அண்ணன்கள் சூர்யா, கார்த்தியுடன் பிருந்தா சிவக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பிருந்த சிவக்குமார் கூறியதாவது: " திரையுலகில் எனது பயணத்தை பாடகியாக தொடங்குவதற்கு முன்னரே நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது.

முதலில் கார்த்திக ராஜா இசையமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் பள்ளியில் படித்து கொண்டு இருந்ததால் மறுக்க நேரிட்டது.

இதன் பின்னர் 2002இல் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன் ஜோடியாக சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்காரா தான் என்னை அணுகினார். சமீபத்தில் கூட அவர் மாதவன் கூட நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததாக என்னை கிண்டல் செய்தார்.

நான் நடிக்க இருந்த கதாபாத்திரம் குறித்து கூட எனக்கு தெரியாது. அப்போது தான் குடும்பத்தின் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரம் என்று நகைச்சுவையாக சொன்னார்கள். ஆனால் அந்த படத்தில் மாதவன், சிம்ரன் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தை நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தேன். பாடகியாக சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்றே விரும்பினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாடகியாக கலக்கி வரும் பிருந்தா சிவக்குமார்

பிருந்தா சிவக்குமார் 2018இல் வெளியான மிஸ்டர் சந்திர மெளளி படம் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், O2 உள்ளிட்ட பாடங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது பாடகியாக கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்