மாசாணி அம்மன் கோயிலில் பூஜை..சூர்யா - த்ரிஷா பங்கேற்பு! தொடங்கியது சூர்யா 45 படம்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜை ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. இதன் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாசாணி அம்மன் கோயிலில் பூஜை..சூர்யா - த்ரிஷா பங்கேற்பு! தொடங்கியது சூர்யா 45 படம்
சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து மிக பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 14ஆம் தேதி கங்குவா படம் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிப்படைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் காதல் கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 44 என்று அழைக்கப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 45 படம் பூஜையுடன் தொடக்கம்
இதையடுத்து நடிகர் சூர்யாவின் புதிய படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளார். சூர்யா 45 என்று அழைக்கப்படும் இந்த படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.