தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Reputed Film Critic, Movie Tracker Kaushik Lm Passed Away Due To Cardiac Arrest

பிரபல சினிமா செய்தியாளர் கெளசிக் மாரடைப்பால் உயிரிழப்பு

Aug 16, 2022, 09:47 AM IST

பிரபல சினிமா விமர்சகர், செய்தியாளர் யூடியூப்பர், சினிமா பாக்ஸ் ஆபிஸ் டிரக்கரான கெளசிக் எல்எம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பிரபல சினிமா விமர்சகர், செய்தியாளர் யூடியூப்பர், சினிமா பாக்ஸ் ஆபிஸ் டிரக்கரான கெளசிக் எல்எம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பிரபல சினிமா விமர்சகர், செய்தியாளர் யூடியூப்பர், சினிமா பாக்ஸ் ஆபிஸ் டிரக்கரான கெளசிக் எல்எம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

டுவிட்டரில் சினிமா குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தருவதில் முக்கியமானவராக கெளசிக் எல்எம் இருந்து வந்தார். எந்தவொரு படமாக இருந்தாலும் அதன் அறிவிப்பு முதல் ரிலீஸ் வரையிலும், ரிலீஸுக்கு பின்னான பாக்ஸ் வசூல் நிலவரங்களையும் தெளிவாக எடுத்து கூறி வந்த இவருக்கு சினிமா துறையினரிடையே நல்ல பெயரும் இருந்து வந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Shruti Haasan: ‘என்ன மன்னிச்சிருங்க.. அத பத்தி’ - பிரேக் அப் குறித்து வாய் திறந்த ஸ்ருதி காதலர்!

Karthigai Deepam: ரூமுக்குள் சென்ற ரியா.. தீபாவுடன் ரொமன்ஸ் செய்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Yodha OTT Release: சித்தார்த் மல்ஹோத்ராவின் யோதா பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

Ghilli Box Office: புது படங்களுக்கே டஃப் கொடுக்கும் கில்லி.. ஒரே வார ரிலீஸில் கோடிகளை அள்ளி மிகப்பெரிய சாதனை

சினிமா நடிகர், நடிகைகள் பலருக்கும் நெருக்கமானவராக இருந்து வந்த இவர் சினிமா தொடர்பான அனைத்து தகவல்கள் ட்ராக் செய்து தெளிவாக டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்கில் அப்டேட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் இருந்து வந்த கெளசிக் பல்வேறு திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதியுள்ளார். கடைசியாக இவரது டுவிட்டர் போஸ்டில் சீதா ராமம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பகிர்வந்திருந்தார். அத்துடன் விருமன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை எடுத்துக்கூறி பின் செய்திருந்தார்.

இளம் வயதான கெளசிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். கெளசிக்கின் திடீர் மறைவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், பிரியா ஆனந்த், இயக்குநர் வெங்கட் பிரபு உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.