தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மோகன் பாபு மன்னிப்பு.. பாடகிக்கு பாலியல் தொல்லை.. கொலை வழக்கில் நடிகர், நடிகைக்கு ஜாமீன்! டாப் சினிமா செய்திகள் இன்று

மோகன் பாபு மன்னிப்பு.. பாடகிக்கு பாலியல் தொல்லை.. கொலை வழக்கில் நடிகர், நடிகைக்கு ஜாமீன்! டாப் சினிமா செய்திகள் இன்று

Dec 13, 2024, 11:16 PM IST

google News
மோகன் பாபு மன்னிப்பு, பாடகிக்கு பாலியல் தொல்லை, கொலை வழக்கில் கன்னட நடிகர், நடிகைக்கு ஜாமீன், இளையாஜா பயோபிக் குறித்த அப்டேட் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
மோகன் பாபு மன்னிப்பு, பாடகிக்கு பாலியல் தொல்லை, கொலை வழக்கில் கன்னட நடிகர், நடிகைக்கு ஜாமீன், இளையாஜா பயோபிக் குறித்த அப்டேட் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

மோகன் பாபு மன்னிப்பு, பாடகிக்கு பாலியல் தொல்லை, கொலை வழக்கில் கன்னட நடிகர், நடிகைக்கு ஜாமீன், இளையாஜா பயோபிக் குறித்த அப்டேட் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது விவகாரம் இன்று நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்தது. அவருக்கு இடைக்கால ஜாமீன் வழக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறை செல்ல இருந்தது தவிர்க்கப்பட்டது.  அல்லு அர்ஜுன் கைது தவிர டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

ரேணுகா சாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கெளடாவுக்கு ஜாமீன்

தனது காதலியும், நடிகையுமான பவித்ரா கெளடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்ததாக ரசிகர் ரேணுகாசாமி என்பவரை பண்ணை வீட்டு வைத்து கன்னட சினிமாவின் ஹீரோவான தர்ஷன் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பவித்ரா கெளடாவும் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆறு மாதம் வரை சிறை வாசம் அனுபவித்து வரும் தர்ஷன், பவித்ரா கெளடா ஆகியோரின் முன் ஜாமீன் வழக்கு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இவர்கள் இருவர் உள்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் மோகன் பாபு மன்னிப்பு

செய்தியாளர்களை தாக்கி விவகாரத்தில் நடிகர் மோகன் பாபு மன்னிப்பு கேட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை முறையாக எடுத்துரைக்கவும், நடந்த சம்பவங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தனிப்பட்ட குடும்பத் தகராறாக ஆரம்பித்தது, ஒரு பெரிய சூழ்நிலையில் சுழன்றது, மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் சங்கத்துக்கு மட்டுமல்ல, பத்திரிகை சகோதரத்துவத்துக்கும் வருத்தத்ததை ஏற்படுத்திய மிகவும் வேதனை அளிக்கிறது.

உங்களின் பொறுமையை பாராட்டி இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில், எனது வீட்டின் கேட்டை உடைத்து சிலர் ஆட்களுடன் நுழைய முயன்ற போது, நான் அமைதியை இழந்தேன். . இந்த குழப்பத்தின் மத்தியில், பத்திரிகை ஊடகங்கள் எதிர்பாராத சூழ்நிலையில் பின்னிப்பிணைந்தன. நான் நிலைமையை சமாளிப்பதற்கு முயற்சித்தபோது, பத்திரிகையாளர் ரஞ்சித் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார்.

இது மிகவும் வருந்தத்த கூடியது, மேலும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நான் மிகவும் வருந்துகிறேன். ரஞ்சித் மற்றும் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

பாடகிக்கு பாலியல் தொல்லை

பாலிவுட் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் ராஜேஷ் ரோஷன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வங்காள பாடகி லக்னாஜிதா சக்ரபோர்த்தி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ராஜேஷ் ரோஷன், பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான கிரிஷ் மாமனார் ஆவார்.

இதையடுத்து மும்பை உள்ள அவரது வீட்டில் இருக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக பாடகி லக்னாஜிதா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீயான் 63 படம் குறித்து வெளியான அப்டேட்

அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக மண்டேலா, மாவீரன் பட இயக்குந்ர மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விக்ரமின் 63வது படம் என்பதால் சீயான் 63 என்று அழைக்கப்படுகிறது. இந்த படம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் போஸ்டர்

செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கு மென்டல் மனதில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மியூசிக்கல் லவ் ஸ்டோரியாக உருவாகும் இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமல்லாமல், இசையமைக்கவும் செய்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விஜயகாந்த மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் ட்ரெயலர் வெளியீடு

மறைந்த நடிகரும், தேமுதிக தலைருமான விஜயகாந்த் இளையமகன் சண்முகபாண்டியின் ஹீரோவாக நடித்து வரும் படம் படைத்தலைவன். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் ஏஐ தொழில்நுட்பத்துடன் விஜயகாந்த் தோன்றும் காட்சிகளும் இடம்பிடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சூப்பர் ஹிட் டிவி சீரியல் இரண்டாம் பாகம் அறிவிப்பு

சன் டிவியில் கடந்த 2018 முதல் 2022 வரை ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த டிவி சீரியல் ரோஜா. இதில் ரோஜா என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி நடித்திருந்தார்.

இதையடுத்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாகத்திலும் பிரியங்கா நல்காரியே நாயகியாக நடிக்கிறாராம்.

அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமீனில் விடுவிப்பு

புஷ்பா 2 ப்ரீமியர் ஷோ பார்க்க வந்து கூட்ட நெரசலில் சிக்கி உயரிழந்தது தொடர்பான வழக்கில் தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில், நான்கு வாரங்களுக்கு அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

சிம்பொனியை நிறைவு செய்த இளையராஜா

சிம்பொனி நிறைவு செய்ததை இசைஞானி இளையராஜா மலையாளத்தில் பேசி அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விடியோவில், அன்புக்குரிய கேரள மக்களே, சொந்தங்களே.. வணக்கம். இந்தச் செய்தி என்னுடைய அண்ணன் ஜே.சி. அண்ணனுக்கானது மட்டும் தான். ஜே.சி. அண்ணனுக்குக் கொச்சியில் வைச்சு, பாராட்டு விழா நடந்தபோது, அண்ணன் என்னிடம் தன்னுடைய ஆசையை சொன்னார்.

அது என்னவென்றால், அவர் ராஜா வந்து சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவோடு ஒரு சிம்பொனி செய்து ரிலீஸ் செய்யணும் என்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

இங்கு தமிழ்நாட்டில் நான் நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். சிம்பொனி அமைச்சிருக்கேன். இந்நிலையில் என்ன நினைப்பில் ஜே.சி. அண்ணன் சொன்னரா, அந்த வேலை முடிந்தது. குறிப்பாக, சிம்பொனிக்காக முழுமையாக எழுதி, சிம்பொனியை முழுமையாக ரெக்கார்டு செய்து வைச்சிருக்கேன். அதனை ஜே.சி.அண்ணனுக்கு பெரிய சந்தோஷத்தோடு தெரிவிக்கிறேன். அதனால் இதனை சொல்கிறேன். அண்ணா நமஸ்காரம். அண்ணா நீங்கள் சொன்ன வேலை, கடவுளின் அனுகிரகத்தோடு சரியாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம். அண்ணன் செய்ததை நான் நிறைவேற்றிட்டேன்’’ என இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

100 நாள்களை நிறைவு செய்த தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த செபடம்பர் மாதம் வெளியான தி கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியுள்ளது. இதையடுத்தும் படம் டிசம்பர் 13ஆம் தேதியுடன் 100 நாள்களை எட்டியுள்ளது. மற்றொரு சாதனையாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலிலும் தி கோட் இடம்பெற்றுள்ளது.

இளையராஜா பயோபிக் குறித்து வெளியான அப்டேட்

கடந்த சில நாள்களாக இளையராஜா பயோபிக் படம் கைவிடப்படுவதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின். இதையடுத்து இது தொடர்பாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி இளையராஜா பயோபிக் கைவிடப்பட்டதாக பரவும் தகவலில் துளியும் உண்மையில்லை. தற்போது படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி