“வீட்டுக்குள் இருந்து கொண்டே விரட்டி அடித்த கொடுமை.. ஸ்ரீதருக்கு விக்ரம் செய்த பச்சை துரோகம்..” கிழித்த பாலாஜி பிரபு!
விக்ரம் சாரிடம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என்று மேலே சென்றவர், கீழே வந்து விக்ரம் ஹைதராபாத்தில் இருக்கிறாராம் என்று மாற்றி பேசினார். இதை ஸ்ரீதர் என் அப்பாவிடம், இந்த உலகம் மிகவும் நன்றி கெட்ட உலகம் என்று சொல்லி வருத்தப்பட்டார்” - பாலாஜி பிரபு!

பிரபல தயாரிப்பாளுரும், இயக்குநருமான பாலாஜியின் மகன் பாலாஜி பிரபு, இயக்குநர் ஸ்ரீதருக்கு நடிகர் விக்ரம் செய்த துரோகத்தை பற்றி மீடியா சர்க்கிள் சேனலுக்கு கடந்த மாதம் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
வாய்ப்புக்காக காத்துக்கிடந்த விக்ரம்
இது குறித்து அவர் பேசும் போது, “இயக்குநர் ஸ்ரீதர் அலுவலகத்தில் காலையிலிருந்து, இரவு வரை ஒரே ஒரு வாய்ப்புக்காக காத்துக் கிடந்தவர்தான் இந்த நடிகர் விக்ரம். அதற்கு காரணம், ஸ்ரீதர் சார் மிகவும் பிரபலமான இயக்குநர். அவர் மூலமாக நாம் அறிமுகமானால், ஒரே நாளில் பிரபலமாக முடியும் என்ற கணக்கில் தான் விக்ரம் அங்கு அப்படி காத்துக் கிடந்தார்.
ஒரு கட்டத்தில், தான் இயக்க இருந்த ‘தந்து விட்டேன் என்னை’ படத்தை ஒரு புது முகத்தை வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்த ஸ்ரீதர் சார், விக்ரம் குறித்து கேட்டு, அவரை வரவைத்து, அவரது போட்டோ ஆல்பங்களை பார்த்து, ஆடிஷன் செய்திருக்கிறார். அவருக்கு விக்ரமை பிடித்து இருந்தது. இதையடுத்து நான் சொல்கிறேன். கொஞ்சம் காத்திரு என்று கூறி அவரை அனுப்பி இருக்கிறார்.
ஸ்ரீதரின் அசோசியேட் இயக்குநராக இருந்தவர்தான் என்னுடைய அப்பா. என்னுடைய அப்பாவை ஸ்ரீதர் சாருக்கு மிகவும் பிடிக்கும். இதனால் அடிக்கடி எங்களுடைய அலுவலகத்திற்கு அவர் வருவார் அப்படி ஒரு முறை வரும்பொழுது, விக்ரம் புகைப்படத்தை காண்பித்து, இந்த பையனை நான் ஹீரோவாக வைத்து படம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்று அப்பாவிடம் சொல்ல, போட்டோக்களை பார்த்த அப்பா, பையன் நன்றாக இருக்கிறான் எடுக்கலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்தார். இதனையடுத்து விக்ரமை வைத்து ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் சார் படம் எடுத்தார். ஆனால் அந்த படம் வியாபாரம் ஆகவே இல்லை. எந்த விநியோகஸ்தரும் அந்த படத்தை வாங்குவதற்கு முன் வரவில்லை
நன்றி மறந்த விக்ரம்
இதனையடுத்து அவர் அந்த படத்தை, தன்னுடைய சொந்தன் பேனரிலேயே ரிலீஸ் செய்தார். அந்த படம் முதல் காட்சியிலேயே படுதோல்வி அடைந்தது. அதில், அவர் மிகவும் நொந்துவிட்டார் அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இருப்பினும் அவருக்கு டைரக்ஷன் செய்ய வேண்டும் என்ற ஆசை அடங்கவே இல்லை. இதனையடுத்து மறுபடியும் ஒரு படம் எடுப்பதற்காக விக்ரம் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது விக்ரம் ‘தில்’ ‘தூள்’ என படங்கள் நடித்து முன்னணி நடிகராக மாறிவிட்டார்.
ஸ்ரீதர் சார் வருவதை பார்த்த வாட்ச்மேன் வாருங்கள் சார், விக்ரம் சார் மேலே தான் இருக்கிறார் என்று கூறிவிட்டார். தொடர்ந்து, நான் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என்று மேலே சென்றவர், கீழே வந்து விக்ரம் ஹைதராபாத்தில் இருக்கிறாராம் என்று மாற்றி பேசினார். இதை ஸ்ரீதர் என் அப்பாவிடம், இந்த உலகம் மிகவும் நன்றி கெட்ட உலகம் என்று சொல்லி வருத்தப்பட்டார்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்