செய்தியாளர்களை விரட்டி விரட்டி அடித்த பிரபல நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதி.. அவருக்கு என்ன ஆச்சு? இதோ விவரம்!
நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பழம்பெரும் நடிகர் மோகன் பாபு தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மோகன் பாபுவுக்கு தற்போது 72 வயது ஆகிறது.இவர் தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார்.
இந்நிலையில் நடிகர் மோகன்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைப்பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
சொத்து பிரச்சனை
முன்னதாக, நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களின் மைக்கை பிடுங்கி நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.