அல்லு அர்ஜுன் மீது எந்த தப்பும் இல்லை.. வழக்கை வாபஸ் பெறுவேன்! உயிரிழந்த ரேவதி கணவர் டுவிஸ்ட்
Allu Arjun: அல்லு அர்ஜுன் மீதான வழக்கில் திடீர் திருப்புமுனையாக உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணனி கணவர் தேவைப்பட்டால் வழக்கை வாபஸ் பெறுவேன் என தெரிவித்துள்ளது. அத்துடன் அல்லு அர்ஜுன் மீது எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

புஷ்பா 2 ப்ரீமியர் ஷோ பார்க்க சென்றபோது அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்க மேலாளர் மற்றும் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் இந்த சம்பவம் தொடர்பாக ஐபிசி பிரிவில் வழக்கு பதிவு செயய்ப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை வாபஸ் பெற தயார்
இதையடுத்து உயிரிழந்த ரேவதியின் கணவர், அல்லு அர்ஜுன் கைது குறித்து கூறியதாவது, "எங்களது மகன் விரும்பியதால் படம் பார்க்க சென்றோம். அல்லு அர்ஜுன் அங்கு வந்ததில் தவறில்லை. எதுவாக இருந்தாலும் வழக்கை வாபஸ் பெற தயாராக உள்ளேன். கைது தொடர்பாக போலீசார் தரப்பில் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.