தளபதி விஜய் ஹீரோவாக அவதரித்த நாள்.. முதல்முறை கதையின் நாயகனாக ஜொலித்த கேப்டன் விஜயகாந்த்! தமிழில் இன்று வெளியான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தளபதி விஜய் ஹீரோவாக அவதரித்த நாள்.. முதல்முறை கதையின் நாயகனாக ஜொலித்த கேப்டன் விஜயகாந்த்! தமிழில் இன்று வெளியான படங்கள்

தளபதி விஜய் ஹீரோவாக அவதரித்த நாள்.. முதல்முறை கதையின் நாயகனாக ஜொலித்த கேப்டன் விஜயகாந்த்! தமிழில் இன்று வெளியான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 04, 2024 08:35 AM IST

தளபதி விஜய் ஹீரோவாக அவதரித்த நாள், முதல்முறையாக கேப்டன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்த படம், கார்த்திக்குக்கு சிறந்த நடிகர் விருதை பெற்று தந்த படம் என டிசம்பர் 4ஆம் தேதியான இன்று தமிழில் வெளியான படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

தளபதி விஜய் ஹீரோவாக அவதரித்த நாள்.. முதல்முறை கதையின் நாயகனாக ஜொலித்த கேப்டன் விஜயகாந்த்! தமிழில் இன்று வெளியான படங்கள்
தளபதி விஜய் ஹீரோவாக அவதரித்த நாள்.. முதல்முறை கதையின் நாயகனாக ஜொலித்த கேப்டன் விஜயகாந்த்! தமிழில் இன்று வெளியான படங்கள்

மனிதனும் மிருகமும்

சிவாஜி கணேசன், மாதுரி தேவி, கண்ணப்பன், சாரங்கபாணி பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க கே. வேம்பு, எஸ்.டி. சுந்தரம் ஆகியோர் இணைந்து இயக்கிய இந்த படம் 1953இல் வெளியானது. சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்ற நிலையில், இதன் பிரண்ட் இல்லாமல் காணாமல் போயுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் காணாமல் போன படங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. சிவாஜி கேரியரில் முக்கிய படங்களில் ஒன்றாக இருந்து வரும் மனிதனும் மிருகமும் படம் வெளியாகி இன்றுடன் 71 ஆண்டுகள் ஆகிறது

அகல் விலக்கு

விஜயகாந்த், சோபனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மசாலா படம் அகல் விளக்கு. 1979இல் வெளியான இந்த படம் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்த முதல் படமாக இருந்து வருகிறது. படத்தின் இளையராஜா இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றன. படம் தோல்வி அடைந்தபோதிலும் விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக இருந்துள்ளது. விஜயகாந்த் ஹீரோவாக அறிமுகமான இந்த படம் வெளியாக இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.

நட்சத்திர நாயகன்

சரத்குமார், ரோஹிணி, ஜெய்ஷங்கர், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்து ஆக்‌ஷன் திரைப்படமாக 1992இல் வெளியான படம் நட்சத்திர நாயகன். செந்தில்நாதன் இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தேவா இசையில் படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றன. சரத்குமார் ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்தது.

நாளைய தீர்ப்பு

சரத்குமாரின் நட்சத்திர நாயகன் வெளியான அதே நாளில் ரிலீசான படம் நாளைய தீர்ப்பு. எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படத்தின் மூலம் தான் தளபதி விஜய் ஹீரோவாக அறிமுகமானார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்திருப்பார். ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா, ராதா ரவி, வினு சக்கரவர்த்தி, கே.ஆர். விஜயா, சரத்பாபு, தாமு, ஸ்ரீநாத்ஸ மன்சூர் அலிகான் என பலரும் நடித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்து. இருப்பினும் விஜய்க்கு சிறந்த புதுமுக நடிகர் என்ற சினிமா எக்ஸ்பிரஸ் விருதை பெற்று தந்தது.

தளபதி விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வரும் நிலையில், அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது.

பூவேலி

கார்த்திக், கெளசல்யா, ஹீரா, அப்பாஸ், ராதாரவி, மனோரமா, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்து 1998இல் வெளியான படம் பூவேலி. செல்வி இயக்கியிருக்கும் இந்த படம் ஹாலிவுட் படமான ஏ வாக் இன் தி கிளவுட்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக்காக உருவாகியிருந்தது. ரெமாண்டிக் ட்ராமா பாணியில் இருக்கும் பூவேலி படம் கலவையான விமர்சனங்கள் வெளியான போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்துக்காக நடிகர் கார்த்திக் தமிழ்நாடு அரசின் சிறப்பு ஜூரி விருதையும், நடிகை கெளசல்யா தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகை விருதையும் வென்றார். ஃபீல் குட் படமாக இருந்து வரும் பூவேலி வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது

ரேணிகுண்டா

கருப்பன் பட இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் புதுமுகங்களான ஜானி, சனுஷா, சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த ரேணிகுண்டா 2009இல் வெளியானது. வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் பெரிய ஹீரோக்கள், பரிச்சயமான நடிகர்கள் யாரும் இல்லாமலேயே ஹிட்டடித்தது. கணேஷ் ராகவேந்திரா இசையில் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. சிறந்த கேங்ஸ்ட்ர் ஆக்‌ஷன் படமாக இருந்து வரும் ரேணிகுண்டா படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.