தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேட்டையனுக்கு 'வெற்றிகரமான' 25வது நாளாம்! சொல்கிறது லைகா.. கமெண்டுகளில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

வேட்டையனுக்கு 'வெற்றிகரமான' 25வது நாளாம்! சொல்கிறது லைகா.. கமெண்டுகளில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Nov 03, 2024, 03:48 PM IST

google News
வேட்டையன் திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதாக லைகா தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
வேட்டையன் திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதாக லைகா தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

வேட்டையன் திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதாக லைகா தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன் - தி ஹண்டர்' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

நட்சத்திர பட்டாளம் நடித்த வேட்டையன்

இப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் மட்டுமின்றி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியாவையே தனது நடிப்பால் கலக்கிவரும் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

வேட்டையன் பட இயக்குநர் த.செ. ஞானவேலின் முந்தைய திரைப்படமான ஜெய்பீம் ஏற்படுத்திய தாக்கத்தால் அவருக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். படம் வெளியாகும் முன்னே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்து படத்திற்கு மேலும் ஹைப் கொடுத்தன. 

இதனால், இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரியும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவும், ரஜினிகாந்த்தின் ரசிகர்களும் பெரிதாக எதிர்பார்த்தனர்.

அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் வேட்டையன் படத்தை திரையிட அதிக திரையரங்குகளை கோரியதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க லைகா பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்றடையவில்லை. அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் சறுக்கலை சந்தித்தது.

குட்டிக் கதையால் மாட்டிக்கொண்ட ரஜினி

சாதாரணமாக, ரஜினிகாந்தின் படம் வெளியாகிறது என்றாலே தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரைப்படங்கள் ஹவுஸ் ஃபுல்லாகி விடும். அத்துடன், அவரது நடிப்பையும், ஸ்டைலையும் கொண்டாடி வருவர். ஆனால் இந்த முறை அதற்கு மாறாக, அதிகளவு எதிர்ப்புகளையே சந்தித்தது. இதற்கு காரணமும் ரஜினிகாந்த் தான். ரஜினிகாந்த் பட புரொமோஷன் விழாக்களில் கூறி வரும் குட்டிக்கதை நடிகர் விஜய்யை மையப்படுத்தி கூறிவருவதாக பல புரளிகள் கிளம்பின. இதனால், இந்தப் படத்தினை விஜய் ரசிகர்கள் வெற்றி பெற விடாமல் காலி செய்தனர்.

24ம் நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

இதன் விளைவு, வேட்டையன் படம் வெளியாகி நேற்றுடன் 24 நாட்கள் நிறைவடைந்தும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவை சந்தித்தது. கடந்த 24 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 123.72 கோடி ரூபாயும், இந்தியா முழுவதும் 146.62 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 253.38 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

லைகா அறிவிப்பு

இந்நிலையில், கருத்து ரீதியில் படம் வெற்றி பெற வேண்டி இருந்தாலும், ரஜினி விஜய் ரசிகர்கள் மோதலால் கலவையான வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் தோல்வியை சந்தித்தது. இதனை வெளிப்படையாக ஏற்க மறுத்த லைகா, இன்று வேட்டையன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், லைகா நிறுவனத்தையும், வேட்டையன் படத்தையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

லைகாவின் திட்டம்

முன்னதாக, ரஜினியை வைத்து லைகா தயாரித்த தர்பார், லால் சலாம் போன்ற படங்கள் வசூலில் பிளாப் ஆனது. தற்போது வேட்டையனும் பிளாப் ஆனதால், ரஜினி சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துத் தரவேண்டும் என வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானதையும் குறிப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி