பாவம் ரஜினி.. வச்சு செஞ்ச விஜய் ரசிகர்கள்.. பரிதாப நிலையில் வேட்டையன்! மூச்சு முட்டும் லைகா..
வேட்டையன் படம் வெளியாகி 17 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உலகளவில் இன்னும் 250 கோடி ரூபாய் வசூலைக் கூட பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் தத்தளித்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தசரா வெளியீடாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியான படம் வேட்டையன். இது நீட் தேர்வையும் அதன் கோச்சிங் சென்டரையும் மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
கணிசமான வசூல்
வேட்டையன் படத்தில் நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலரும் நடித்துள்ளனர். நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அத்துடன், இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் கணிசமான வசூலைத் தான் பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இந்நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்டையன் படம் முதல் 10 நாள்களில் ரூ. 129 கோடி இந்திய அளவில் வசூலை ஈட்டியது. ரஜினி படங்களில் பெரிய அளவில் ஓபனிங் கிடைக்காத போதிலும் அடுத்தடுத்த நாள்களில் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்தது. படம் வெளியாகி 17 நாள் நிறைவடைந்த நிலையில் இதுவரை படம் உலக அளவில் 245.75 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 121.41 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. இந்திய அளவில் 166.25 கோடி ரூபாய் வசூலையும் 143.34 கோடி ரூபாய் நிகர வசூலையும் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, படம் போதுமான அளவு வசூலை கொடுக்காத காரணத்தினால், பல தியேட்டர்களில் இருந்து படத்தை எடுத்துவிட்டனர். அதே சமயம் வேட்டையன் படத்திற்கு பதிலாக நடிகர் ஜீவாவின் பிளாக் படம், ஹாவிவுட் திரைப்படமான வெனோமை திரையிட்டு வருகின்றனர்.
ஓடிடியிலும் சறுக்கல்
வேட்டையன் திரைப்படத்தின் வசூல் குறைந்துகொண்டே வருவதால், படத்தின் ஓடிடி ரிலீஸிற்கான தொகையிலும் பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் இந்த படத்தை ரூ. 90 கோடி கொடுத்து வாங்கியுள்ளனராம். வேட்டையன் இந்தி பதிப்பு மல்டிபிளக்ஸ்களில் வெளியாகாத நிலையில் 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற விதிமுறை பொருந்தாது.
ஓடிடியிலும் பாதிப்பு வருமா?
அத்துடன் வரும் நவம்பர் 7ஆம் தேதி படம் வெளியாகி நான்கு வாரங்கள் முடியும் நிலையில், படம் அந்த நாளில் ஓடிடியில் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு தங்கலான், லப்பர் பந்து உள்ளிட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் வேட்டையன் ஓடிடி வெளியீடு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்னரே படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்ற தெரிகிறது.
லைகாவின் பக்கா பிளான்
வேட்டையன் படம் தொடர் சறுக்கலை சந்தித்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ரஜினியை வைத்து பெரும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. வேட்டையன் படம் மட்டுமின்றி, ரஜினியை வைத்து தயாரித்த லால் சலாம், தர்பார் போன்ற படங்களும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியதால் லைகா நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால், ரஜினிகாந்த் தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு சம்பளம் வாங்காமல் ஒரு படம் மட்டும் நடித்துத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டாபிக்ஸ்