என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல..சிவகார்த்திகேயனின் பெஸ்ட்! தயவுசெய்து அமரன் படம் பாருங்கள் - ரஜினிகாந்த் பேச்சு
“என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல. இந்த படத்துல ஒரு பெர்ஷனல் டச்சும் இருக்கிறது. தயவு செய்து அமரன் படத்தை எல்லோரும் பாருங்கள்” என கூறியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
அமரன் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளார் கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் படக்குழுவினரையும் நேரில் அழைத்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். இதையடுத்து அமரன் படத்தையும், படக்குழுவினரையும் ரஜினிகாந்த் பாராட்டிய விடியோ தற்போது பகிரப்பட்டுள்ளது.
ராஜ்கமல் நிறுவனம் விடியோ பகிர்வு
ராஜ்கமல் நிறுவனத்தில் யூடியூப் சேனலில் பகிரப்பட்டிருக்கும் விடியோவில் ரஜினிகாந்த் "அமரன் படத்தை பார்த்தேன். படத்தை தயாரித்த கமல்ஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் கம்மிதான். முகுந்த் வரதராஜன் பயோபிக் எடுக்கனும்னு முடிவு செஞ்சதுக்கு பாராட்டுகள். படத்தை நினைத்து பார்த்ததை விட
இயக்குநர் டைரக்ட் பண்ண விதம் மிக அருமை. எவ்வளவோ ராணுவ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த படத்தின் கேமராமேன், எடிட்டர் என குழுவினர் செய்திருக்கும் வேலை சிறப்பு. சிவகார்த்திகேயன் முகந்தாகவே வாழ்ந்திருக்கார். அவரது கேரியர்ளே இதுதான் பெஸ்ட். அதைப்போல் தான் சாய்பல்லவியும்.
படத்தில் எனக்கு பெர்ஷனல் டச் இருக்கு
இந்த படம் பார்த்து என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல. எனக்கு இந்த படத்த பார்த்ததுல ஒரு பெர்ஷனல் டச்சும் இருக்கும். என்னுடைய இரண்டாவது அண்ணன் நாகேஷ்வர ராவ் 16 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்தார். சீனா போரில் பங்கேற்ற அவருக்கு முதுகில் குண்டடி பட்டது. பின்னர் ஓய்வு பெற்றார்.
எல்லோரும் பார்க்க வேண்டிய படம் இது. ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க. அவங்க பாதுகாக்கலைன்னா ஒன்னுமே இல்லை.
படத்தில் இந்துவாக வரும் கதாபாத்திரம் சொல்லும் வசனம் உள்ளது. நான் கல்யாணத்துக்கே ஒத்துக்க வேண்டாம்னு இருந்தேன். ஆனா யுனிபார்ம பார்த்ததும் ஒத்துக்கிட்டேன் சொல்வார்.
தயவு செய்து படத்தை பாருங்கள்
ராணுவ வீரர் யுனிபார்ம்ல பார்க்குறது எப்படி இருக்கும் நீங்கள் பார்த்தால். இந்த படத்தை எடுத்த கமல எவ்வளவு பாராட்டுனாலும் கம்மிதான். படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் பாராட்டுகள். தயவு செய்து எல்லோரும் படத்தை பாருங்க. இந்தியன் என்கிற உணர்வு ஏற்படும். படம் பிரமாதம போயிட்டு இருக்கு. கிரேட். ஜெய்ஹிந்த்" என்று பேசியுள்ளார்
தொலைபேசியில் கமலுக்கு வாழ்த்து
#Superstar ரஜினிகாந்த தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.
நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.
அமரன் பாக்ஸ் ஆபிஸ்
தீபாவளி நாளில் வெளியான அமரன் படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 40.65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் ரூ. 21 கோடிக்கும், இரண்டாம் நாளில் 19 கோடிக்கும் வசூல் ஆகியுள்ளது. மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் ரூ. 100 கோடியை அமரன் படம் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் பேசப்படும் அமரன்
ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை படமாகக் கொண்டுள்ளதால் இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படத்தை பார்த்த பலர் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் சேர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குடும்ப ரசிகர்களுக்கும் இப்படம் மிகவும் பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாண்டிகைகளையே சிவகார்த்திகேயன் குறி வைத்து வருகிறார்.
டாபிக்ஸ்