முடிந்ததா வேட்டையன் ஃபீவர்.. 250 கோடிக்கே திணறும் வசூல்.. லைகா போடும் பக்கா பிளான்!
வேட்டையன் படம் வெளியாகி 16 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உலகளவில் இன்னும் 250 கோடி ரூபாய் வசூலைக் கூட பெறாததால், அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரஜினியை வைத்து புதிய திட்டம் தீட்டியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தசரா வெளியீடாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியான படம் வேட்டையன். இது நீட் தேர்வையும் அதன் கோச்சிங் சென்டரையும் மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
கணிசமான வசூல்
இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலரும் நடித்துள்ளனர். நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அத்துடன், இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் கணிசமான வசூலைத் தான் பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இந்நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்டையன் படம் முதல் 10 நாள்களில் ரூ. 129 கோடி இந்திய அளவில் வசூலை ஈட்டியது. ரஜினி படங்களில் பெரிய அளவில் ஓபனிங் கிடைக்காத போதிலும் அடுத்தடுத்த நாள்களில் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்தது. படம் வெளியாகி 16 நாள் நிறைவடைந்த நிலையில் இதுவரை படம் உலக அளவில் 244.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் தெரிவித்துள்ளது.