ரஜினி தான் வேட்டையன் வசூலை கெடுத்தார்.. அவர் சும்மா இருந்திருந்தா இதெல்லாம் தேவையா? அந்தணன் கேள்வி
நடிகர் விஜய் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியதால் தான் வேட்டையன் படம் தோல்வியை சந்தித்து என சினிமா விமர்சகர் அந்தணன் கூறியுள்ளார்.
ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தைப் பிடித்தவர் த.செ. ஞானவேல். இவர் நடிகர் ரஜினி காந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, அபிராமி, துஷாரா விஜயன் என பல நடிகர்களை வைத்து வேட்டையன் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
வேட்டையன் வசூல்
நீட் தேர்வை மையப்படுத்தி, கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் பேசியிருப்பார். மேலும், என்கவுண்டர் குறித்தும் பேசியிருப்பார். நல்ல கதைக் களத்தைக் கொண்ட இந்தப் படம் கடந்த 10ம் தேதி வெளியாகி மக்களிடம் போதிய வரவேற்பை பெறாமல் வசூலில் அடிவாங்கி வருகிறது. இந்நிலையில், அதுகுறித்து விமர்சகர் அந்தணன் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
வேட்டையன் நல்ல படம்
அவர் வேட்டையன் படத்தின் வசூல் குறித்து பேசுகையில், வேட்டையன் படம் உண்மையிலேயே மிகவும் நல்ல திரைப்படம். இந்தப் படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. இரண்டாம் பாதியில் படத்தில் சிறிது தொய்வு இருந்தாலும், படத்தை முழுவதுமாக எடுத்துக் கொண்டால் இது ஒரு நல்ல படம். ரஜினி காந்த் போன்ற உச்ச நடிகர் இது போன்ற சமூக அக்கறை உள்ள கதைகளில் நடிப்பது பாராட்டுக்குரியது.
ரஜினியின் குட்டிக் கதை
படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைத் தான் பெற்றது. இது மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற வேண்டிய படம். ஆனால் இந்தப் படத்தினை விஜய் ரசிகர்கள் வெற்றி பெற விடாமல் காலி செய்ய நினைத்ததற்கு முக்கிய காரணமே ரஜினி காந்த் தான். இவர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் குட்டிக் கதையைக் கூறி சில எடுத்துக் காட்டுகளை சொல்லி வந்தார். இவர் கூறிய கதைகள் நடிகர் விஜய்யை மையப்படுத்தி கூறியவை தான் என ரசிகர்கள் கூறி வந்தனர். மேலும், இந்த பேச்சுகள் ரஜினி காந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சோசியல் மீடியாக்களில் ரஜினி விஜய் ரசிகர்கள் மோதி வந்தனர்.
வசூலை பாதித்த கதை
இந்த பிரச்சனையின் விளைவு தான் தற்போது ரஜினி படத்தின் வசூலை மொத்தமாக பாதித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு நல்ல படத்தின் கதையை மக்களிடம் கொண்டு செல்லாமல் வெறுப்பு பிரச்சாரம் செய்யவும் காரணமாக அமைந்தது.
இந்தப் பிரச்னையை விஜய் மற்றும் ரஜினி என இருவருமே பேசி முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் இருவரும் அதை தற்போது வரை செய்யாததால் நடிகர் விஜய் படத்தின் கோட் படத்தின் வசூலும், ரஜினி காந்த்தின் வேட்டையன் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தப்பினார் விஜய்
ஆனால், விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கி அதில் பிஸியாக இருக்கிறார். மேலும், திரைப்படத்தில் அவர் இனி நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளதால் எதிர்காலத்தில் அவருக்கு வசூல் பிரச்னை இல்லை. ஆனால் ரஜினி காந்த்திற்கு இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதற்கு எதிர்வினை செய்ய விஜய்க்கு எதிராக ரஜினியின் ரசிகர்கள் தேர்தல் வேலைகளில் ஏதேனும் பிரச்சனைகள் செய்யலாம். அல்லது அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாம். எனவே இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட விஜய் தயாராகவே உள்ளார். அது தொடர்பான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
ரசிகர்கள் மோதல்
அதற்காக விஜய் விரைவில் ரஜினி காந்த் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விருந்து சாப்பிட திட்டமிட்டிருகிறார். இவிஜய்க்கு எதிராக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தேர்தலில் வேண்டுமானால் வேலை செய்யலாம், ஆனால் இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட விஜய் தயாராகவே உள்ளார். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு விஜய் குடும்பத்துடன் சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு வர திட்டமிட்டு வருகின்றார். இனி, இந்தப் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினி காந்த் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ரஜினி என்ன செய்வார்?
இவரின் இந்தக் கருத்து இந்த சமயத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி காந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினி இந்த விஷயத்தில் முடிவெடுக்கவில்லை என்றால் அது அவரின் அடுத்த படத்தையும் சேர்த்து பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்