Cheyyaru Balu:''ஜெய்பீம்'' படம் கோடிக்கணக்கில் வசூல்.. கதை மாந்தர்களை கண்டுகொள்ளாத சூர்யா.. கிழித்த செய்யாறு பாலு!
Cheyyaru Balu Reacts JaiBhim RealStory Persons: ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை மாந்தர்களுக்கு, ஒரு உதவியும் செய்யாத முன்னணி நடிகர் பற்றி செய்யாறு பாலு விமர்சித்தார்.

Cheyyaru Balu Reacts JaiBhim RealStoryPersons:‘’ஜெய்பீம்'' படத்தின் உண்மையான மாந்தர்களுக்கு, ஒரு வீடு கூட தயாரிப்புக்குழு கட்டிக்கொடுக்கவில்லை என பத்திரிகையாளர் செய்யாறு பாலு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் அளித்த பேட்டியில், ‘’ஜெய்பீம் படத்தோட உண்மையான கதை மனுஷி, பார்வதி ராஜேந்திரன். ஜெய்பீம் படம் நிறைய வெற்றி அடைஞ்சிருச்சு. சமீபத்தில் அவர்கள் வாழ்ந்த வீட்டைப் பற்றிய இரண்டு புகைப்படங்களைப் பார்த்தேன். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த படம், நிறைய வசூலைக் குவித்திருக்கு. ஆனால், அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை.
சமீபகாலமாக, கதைத்திருட்டு பரவலாக நடக்கிறது. முன்பு தேவர் ஃபிலிம்ஸில் கதை இலாகா என்ற பிரிவே இருந்தது. மூலக்கதை எழுதியவர் குறித்த பெயரைப் போடுவார்கள். எழுத்தாளர்களிடம் எல்லாம் பணம் கொடுத்து கதையை வாங்குவார்கள். தற்போது நாளடைவில் அது இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது.