Tamil Cinema News Live : - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மோசமான வருடமா?.. “ ரொம்ப சில பேர்தான் இத பண்றாங்க” - விமர்சனங்களுக்கு வழக்கறிஞர் பதிலடி
Nov 24, 2024, 01:09 PM IST
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அவரது வழக்கறிஞர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
- ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இதற்கு முன் வேறு எந்த தெலுங்கு படமும் இந்த சாதனையை படைத்து இல்லை எனவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.
தனுஷை எதிர்த்து, நயன்தாராவிற்கு ஆதரவாக நின்றது ஏன் என்பது குறித்து பார்வதி பேசி இருக்கிறார்.
- நடிகர் சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான கங்குவா திரைப்படம் வெளியான 10ம் நாளில் சற்று அதிக வசூலை பெற்றதாகத் தெரிகிறது.
- நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில், இவர்கள் இருவரும், சமீபத்தில் ஒரு உணவகத்தில் ஒன்றாக உணவருந்தியதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- தமிழ் சினிமா ரசிகர்களிடையே இப்போதும் காதல் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் காதல் படம் எடுப்பது இல்லை என நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
- அமரன் திரைப்படம் வெளியாகி 24 நாட்கள் முடிவடைந்த நிலையிலும், அந்த படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையாமலேயே உள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் தான் தனுஷ் விவாகரத்து கேட்டார் என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அப்பா படுக்கையில் இருந்த போது பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து. அப்பாவின் நலம் குறித்து விசாரிப்பார்.- பாலு - வாசு நண்பர்களான கதை
அப்பாவின் இழப்பு..அம்மாவை துளைத்தெடுத்த வயிற்றுவலி; தர்காவில் கிடைத்த விமோசனம்; ஓவர் நைட்டில் உலகபுகழ் என ரஹ்மான் தன்னுடைய வாழ்க்கையில் பார்த்த துன்ப இன்பங்களை இங்கே பார்க்கலாம்.
- நடிகர் சூர்யாவின் படங்களை தொடர்ந்து நாரடிப்போம். உன்னால் முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கடுமையாக பேசியுள்ளார்.
என்னுடைய அம்மா நான் படிக்க மறுக்கிறேனே என்று கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார். தாத்தா கொடுத்த கேமராதான் என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது. - பி.சி.ஸ்ரீராம்