ரகசிய டேட்டிங்.. இவர் தான் அவரோ? ரசிகர் வெளியிட்ட போட்டாவால் சிக்கிக் கொண்ட ஜோடி.. டோலிவுட்டில் பரபரப்பு
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில், இவர்கள் இருவரும், சமீபத்தில் ஒரு உணவகத்தில் ஒன்றாக உணவருந்தியதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக மாறியவர் விஜய் தேவரகொண்டா. இவர், நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியில் ஒன்றாக செல்வதாகவும் பல மாதங்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடி
இதற்கு காரணம், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரெட் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் குறித்து வெளியாகும் கிசுகிசுக்களுக்கு பதிலளிக்காமல் இவருவரும் கடந்து செல்வதால், ரசிகர்கள் அவர்களின் கற்பனைத் திறனை அதிகரித்து வருகின்றனர்.
கசிந்த புகைப்படம்
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக இணைந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் வெளியிட்டு, பரபரப்பை அதிகரித்தார். ரதிகர் வெளியிட்ட சமயத்தில் அணிந்திருந்த அதே உடையுடன், ஹோட்டல் ஒன்றில் ஒரு நல்ல உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக ராஷ்மிகாவும் அவரது சோசியல் மீடியா தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஆனால், அந்த புகைப்படத்தில் ராஷ்மிகா அவருடன் இருக்கும் நபர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் ராஷ்மிகா தனது உறவை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.
ரசிகர் வெளியிட்ட புகைப்படத்தில், ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நீல நிற உடைகளை அணிந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா தன் அடையாளத்தை மறைக்கும் விதமாக தொப்பி அணிந்துள்ளார்.
அதிகரிக்கும் கிசுகிசு
ரசிகர் வெளியிட்ட புகைப்படம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், இது இவர்களின் வெளிப்படையான ரகசிய உறவு, நமக்குத் தெரியும் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் கண்ணாமூச்சி விளையாட ஆசைப்படுகிறார்கள் எனவும் இவர்களைப் பற்றி நாம் விவாதிக்கக் கூடாது. இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் இருந்தாலும் இவர்கள் க்யூட் ஜோடி என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா தற்போது சாஹிபா என்ற ஆல்பம் பாடலில் நடித்து உள்ளார். இந்த இசை வீடியோவை விளம்பரப்படுத்தும் போது அவர் காதல், உறவுகள் மற்றும் திருமணம் குறித்து பேசினார்.
நடிகையுடன் டேட் ஒப்புக் கொண்ட விஜய்
கர்லி டேல்ஸ் உடனான ஒரு நேர்காணலில், வழக்கமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதையும் சொல்லாமல் இருக்கும் விஜய் தேவரகொண்டா முதல் முறையாக அதை உடைத்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
காதலிப்பது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். காதலிக்கவும் தெரியும். அது நிபந்தனையற்றதா என்று தெரியவில்லை. ஏனென்றால் என் காதல் எதிர்பார்ப்புகளுடன் கலந்தது. காதலில் நிபந்தனைகள் இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். எனக்கு 35 வயதாகிறது. நான் சிங்கிளாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் காதலிக்கிறேன். ஒரு சக நடிகருடன் டேட்டிங் செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
நெவர் ஹேவ் ஐ எவர் விளையாட்டில் விஜய் தேவரகொண்டா இதனை ஒப்புக் கொண்டுள்ளார். இவரின் இந்தப் பேட்டி வெளியானதில் இருந்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இதுதான் முக்கிய பேச்சாக இருந்தது.
அடிக்கடி வெளியே செல்லும் ஜோடி
அதுமட்டும் அல்லாது, ராஷ்மிகா மந்தனா அடிக்கடி விஜய் தேவரகொண்டா வீட்டிலிருந்து புகைப்படங்களை வெளியிட்டு, அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்கிறார், இது அவர்கள் டேட்டிங் செய்கிறார்களா என்று ரசிகர்களை யோசிக்க வைக்கிறது. அது மட்டுமில்லாமல் இருவரும் அடிக்கடி விடுமுறைக்கு ஒன்றாக வெளியே செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரின் உறவு குறித்த பேச்சு அடிக்கடி எழுந்து வருகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.