தனுஷ் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு? ரஜினி வீட்டில் குழாயடி சண்டை.. குண்டைத் தூக்கிப் போட்ட பத்திரிகையாளர்
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் தான் தனுஷ் விவாகரத்து கேட்டார் என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நடிகர் தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் உள்ள நிலையில், திருமணமாகி சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
விவாகரத்தை உறுதி செய்த தனுஷ்
இவர்கள் இருவரின் விவாகரத்து முடிவும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவை உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், தனுஷூம் ஐஸ்வர்யாவும் விவாகரத்து முடிவை கைவிடுவார்கள் என தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது, தனுஷூம் ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களின் விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இது கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பாக்கிய நிலையில், பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கிங் 24X7 எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல வெளிவராத தகவல்களை கூறியுள்ளார்.