"சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம்.. முடிஞ்சத பண்ணிக்கோ".. சவால் விட்ட சீரியல் நடிகர்!
நடிகர் சூர்யாவின் படங்களை தொடர்ந்து நாரடிப்போம். உன்னால் முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கடுமையாக பேசியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் வெளியான நாள் முதல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தப் படத்தை பற்றி விமர்சித்தவர்களை விட சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்கள் தான் அதிகம். அப்படி இருக்கையில் தற்போது, சீரியல் நடிகர் ஒருவர் தனிப்பட்ட முறையில் சூர்யாவை மிகவும் மோசமாக தாக்கிப் பேசியுள்ளார்.
சீரியல் நடிகர் ரவிச்சந்திரன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதன் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், தற்போது 2ம் பாகம் வெளியாகி வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரத்தின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் தான் ரவிச்சந்திரன். இவர், ஜீ தமிழில் வெளியாகும் இதயம் தொடரிலும் நடித்து வருகிறார்.
நடிப்பைத் தாண்டி இவர் அரசியல் கருத்துகளைப் பேசியும் பலரால் அறியப்பட்டவர். அப்படி இருக்கையில், தற்போது அவர் சூர்யாவைப் பற்றியும் அவர் மனைவி மற்றும் குடும்பத்தைப் பற்றியும், சூர்யாலின் படங்கள் பற்றியும் பேசி வைரலாகி உள்ளார்.
தமிழ்நாட்டுல தரமான கல்வி இல்லையா?
இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டுல பிறந்து வளர்ந்த சூர்யா இங்க தரமான கல்வி கிடைக்காதுன்னு சொல்லிட்டு, தன்னோட பிள்ளைகளுக்குக்கா மும்பைக்கு போனதா சொல்றாரு. உங்க பிள்ளைங்க மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும். ஆனா இங்க இருக்குற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துடும்.
சூர்யா படத்தை நாரடிப்போம்
நாங்களும் பண்ணுவோம்.. நாங்களும் செய்வோம்.. தொடர்ந்து செய்வோம்.. சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம். உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ" என மிகவும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பு கூடாது என சூர்யா பேசியதாகவும், அதற்கு பதிலடி தரும் வகையில் இவ்வாறு கூறியதாகவும் இவர் விளக்கமளித்துள்ளார்.
தொடர் விமர்சனத்தில் சிக்கும் சூர்யா
தமிழ்நாட்டில் ஏற்கனவே, மிக மோசமான நிலையில் கங்குவா படத்தையும் சூர்யாவையும் திட்டினர். இவர்கள் தனிப்பட்ட சில கருத்துகளை முன்வைத்து திட்டமிட்டே சூர்யாவையும், அவரது குடும்பத்தையும் டார்கெட் செய்து வருவது தெரிகிறது. நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் தான் கங்குவா படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகின்றன். அந்த சமயத்தில் நடிகர் ரவி இவ்வாறு பேசி இருப்பது, தனிப்பட்ட முறையில் அவரை அச்சுறுத்துவது போன்றே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜோதிகாவின் கருத்து
முன்னதாக, கங்குவா படத்திற்கு மக்களிடமிருந்து பல தனிப்பட்ட விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக, சூர்யாவின் மனைவி என்ற அடிப்படையில் இல்லாமல், ஒரு ரசிகையாக ஜோதிகா விமர்சகர்களுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
இதில், முதல் அரை மணி நேரம் படம் நன்றாக இல்லை. படத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், படத்தின் ஒளிப்பதிவு பாராட்டும் படி இருந்தது. 2ம் பாதியில் பெண்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் நன்றாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இங்கு வெளியாகும் இரட்டை அர்த்த வசனப் படங்களுக்கு எல்லாம் வராத பேச்சுகள் இந்தப் படத்திற்கு ஏன் வருகிறது என சில கேள்விகளையும் முன்வைத்தார்.
இந்நிலையில், கங்குவா படத்தால் தொடர் விமர்சனங்களை சந்தித்து வரும் சூர்யாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஆதரவாக சூர்யா ரசிகர்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.