ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மோசமான வருடமா?.. “ ரொம்ப சில பேர்தான் இத பண்றாங்க” - விமர்சனங்களுக்கு வழக்கறிஞர் பதிலடி
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அவரது வழக்கறிஞர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ஏ.ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு அண்மையில் விவாகரத்து முடிவை அறிவித்தார். அவரது அந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் இந்த பிரச்சினை குறித்து ஏ.ஆர்.ரஹ்மானை சாடியிருந்தனர். அதில் ஒரு சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த வருடம் அவரது வரலாற்றிலேயே மோசமான வருடம் உள்ளிட்ட கருத்துக்களை கூறி எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்த நிலையில், இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பாலிவுட்டில் தனியார் சேனலுக்கு பேசி இருந்தார்.
பெரும்பான்மையான நபர்கள் செமிகோலனை பயன்படுத்துவதில்லை.
இது தொடர்பாக பேசிய அவர், “ ஆங்கில இலக்கணத்தில் இருக்கும் விஷயங்களை நாம் பெரிதளவில் அணுகும் போது, அதில் முற்றுப்புள்ளி, கமா, செமிகோலன் உள்ளிட்டவை இருப்பதை பார்க்கலாம். அதே போன்றதொரு ஃபீலைதான் நாங்கள் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அடைந்தோம்.
அதிஷ்டவசமாக பெரும்பான்மையான நபர்கள் செமிகோலனை பயன்படுத்துவதில்லை. மிகச்சிலரே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆகையால் ஹேஷ்டேக் விவகாரம் பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை.” என்று பேசினார்.
ஏ. ஆர். ரஹ்மானுடன்..
ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மண வாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்திருப்பதாக கூறி வெளியிட்ட அறிக்கை இங்கே
“இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் ஏற்பட்ட அழுத்ததிற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
தனிப்பட்ட பிரைவசியை அளிக்க
அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால் இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” குறிப்பிடப்பட்டு இருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முடிவு குறித்து வலியோடு வெளியிட்டு இருந்த பதிவு இங்கே!
அதில், "நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.
நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும்போது, எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்