தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷின் திருமணம்.. இணையத்தில் உலா வரும் பத்திரிக்கை - முழு விவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷின் திருமணம்.. இணையத்தில் உலா வரும் பத்திரிக்கை - முழு விவரம்

Dec 06, 2024, 07:24 AM IST

google News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகை இணையத்தில் உலா வருகின்றன. "கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தாட்டில் ஆகியோர் ஒன்றாக இணைந்து தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிய வேண்டுகிறோம்" என கூறப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகை இணையத்தில் உலா வருகின்றன. "கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தாட்டில் ஆகியோர் ஒன்றாக இணைந்து தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிய வேண்டுகிறோம்" என கூறப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகை இணையத்தில் உலா வருகின்றன. "கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தாட்டில் ஆகியோர் ஒன்றாக இணைந்து தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிய வேண்டுகிறோம்" என கூறப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

சினிமா கேரியரில் பீக்கில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல்கள் உலா வந்த நிலையில், தனது இன்ஸ்டா பதிவு மூலம் தான ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை உறுதி படுத்தியதுடன், காதலரையும் அறிமுகப்படுத்தினார். அதன்படி கீர்த்தி சுரேஷ் வருங்கால கணவர் ஆண்டனி தாட்டில் என்பது, அவர் பிரபல தொழிலதிபராகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற கீர்த்தி சுரேஷ், தனக்கு திருமணம் நடக்கப்போவது பற்றியும் உறுதிபடுத்தினார்.

கீர்த்தி சுரேஷ் திருமண பத்திரிகை

இதையடுத்து கீர்த்தி சுரேஷ் திருமண பத்திரிகை என்று கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பத்திரிகை ஒன்று வைரலாகி வருகிறது. எக்ஸ் பயனாளர் ஒருவர் ஷேர் செய்யப்பட்டிருக்கும் அந்த பத்திரிகையில், "உறவினர்கள் மற்ரும் நெருக்கமானவர்கள் பங்கேற்க எங்கள் மகளுக்கு டிசம்பர் 12ஆம் திருமணம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் உயர்வாகக் கருதுகிறோம், அவற்றை உங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தாட்டில் ஆகியோர் ஒன்றாக இணைந்து தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிய வேண்டுகிறோம். அன்புடன் அன்புடன் ஜி சுரேஷ் குமார் மற்றும் மேனகா சுரேஷ் குமார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த பத்திரிகையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் எந்த இடத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த தகவல் பற்றி கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து உறுதிபடுத்தவில்லை. 

இருப்பினுன் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வரும் இந்த பத்திரிகை மூலம் கீர்த்தியின் திருமணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று நடைபெற இருப்பதாக தெரிகிறது. 

முன்னதாக கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் உள்ள புகழ் பெற்ற தேவாலயத்தில் வைத்து டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இதற்கிடையே தனது திருமணத்தை உறுதிப்படுத்தியது போல் திருமணம் நிகழ்வு எங்கு, எப்போது நடைபெற இருக்கிறது என கீர்த்தி சுரேஷ் தரப்பின் அதிகாரப்பூர்வ தகவலை எதிர்நோக்கி ரசிகர்களை காத்துக்கிடக்கின்றனர்.

15 வருட உறவு

ஆண்டனி தாட்டில் உடனான தனது ரிலேஷன்ஷிப்பை உறுதிப்படுத்தி கீர்த்தி சுரேஷ் பகிர்ந்திருக்கும் பதிவில், கீர்த்தி - ஆண்டனி ஆகியோர் தங்களது முகத்தை காட்டாதவாறு ஜோடியாக நிற்க, அதில், 15 ஆண்டுகள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. எப்போதும் ஆண்டனி X கீர்த்தி என்று ஹார்ட் எமோஜிகளுடன்" குறிப்பிட்டிருந்தார்.

 

இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு 15 வருடங்களுக்கு மேல் இருந்து வருவதாக தெளிவுபடுத்திய கீர்த்தி, தற்போது திருமணத்துக்கு தயாராகியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் படங்கள்

1980களில் ஹீரோயினாக வலம் வந்த மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படம் ஹீரோயின் ஆனார். இதன் பின்னர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ படங்களில் நடித்த ஹிட் நடிகையாக உருவெடுத்தார்.

தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்க்கார் படங்களில் ஜோடி போட்ட கீர்த்தி, அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்தார். தமிழை போல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி போன்றொருடன் நடித்த தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆனார்.

இந்த ஆண்டில் இவரது நடிப்பில் சைரன், ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தி சுரேஷ் இந்தியில் முதல் முறையாக நடித்திருக்கும் பேபி ஜான் என்ற படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படம் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி