எனக்கு கோவாவுல கல்யாணம்.. திருப்பதியில் வெட்கப்பட்டு கன்பார்ம் செய்த கீர்த்தி சுரேஷ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எனக்கு கோவாவுல கல்யாணம்.. திருப்பதியில் வெட்கப்பட்டு கன்பார்ம் செய்த கீர்த்தி சுரேஷ்..

எனக்கு கோவாவுல கல்யாணம்.. திருப்பதியில் வெட்கப்பட்டு கன்பார்ம் செய்த கீர்த்தி சுரேஷ்..

Malavica Natarajan HT Tamil
Nov 29, 2024 01:09 PM IST

கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெற உள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

எனக்கு கோவாவுல கல்யாணம்.. திருப்பதியில் வெட்கப்பட்டு கன்பார்ம் செய்த கீர்த்தி சுரேஷ்..
எனக்கு கோவாவுல கல்யாணம்.. திருப்பதியில் வெட்கப்பட்டு கன்பார்ம் செய்த கீர்த்தி சுரேஷ்..

திருப்பதியில் தரிசனம்

இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கீர்த்தி சுரேஷ் , தனது தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா, சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அதிகாலை விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை கும்பிட்டு வழிபட்ட அவர் பின், வேத பண்டிதர்களிடம் ஆடி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கோவாவில் திருமணம்

அப்போது, "நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடக்க உள்ளது. என்னுடைய திருமணம் கோவாவில் நடைபெறும். தற்போது நான் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறேன்" என்றார்.

மலையாள நடிகை மேனகா, சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார்.

காதலை கன்ஃபார்ம் செய்த கீர்த்தி

கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பை அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "15 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தததிற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடந்துகொண்டே இருக்கும். இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அவர் தன் காதலரை அறிவித்ததுடன், இதுவரை உலா வந்த வதந்திகளையும் முடித்து வைத்து திருமணத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.

பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட திருமணம்

முன்னதாக, பிரபல மலையாள ஊடகத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனது பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளவுள்ளாராம். இவரது திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கீர்த்தியின் திருமணம் பற்றி அவரது குடும்பத்தாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பலருக்கும் காத்திருக்கின்றனர். ஆனால் இதுபற்றி எந்த உறுதியான தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் கோவாவில் நடைபெறுவதை உறுதி செய்தார்.

மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்

இதற்கிடையே வரும் டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழன் ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளாராம். இவர்களின் திருமணம் டிசம்பரில் கோவாவில் உள்ள பிரபல சர்ச்சில் வைத்து நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தனது காதலர் கிறிஸ்தவர் என்பதால் திருமணத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷும் கிறிஸ்தவ மாதம் மாறுவது குறித்து உத்தேசித்து வருவதாக பிரபல இணையத்தளமான பிலிம்பிபீட் தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.