Raghu Thatha: கலவை விமர்சனம், நல்ல வசூல்..கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கலக்கிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raghu Thatha: கலவை விமர்சனம், நல்ல வசூல்..கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கலக்கிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

Raghu Thatha: கலவை விமர்சனம், நல்ல வசூல்..கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கலக்கிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 11, 2024 07:45 AM IST

Raghu Thatha OTT release: கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், நல்ல வசூலை அள்ளிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை பார்க்கலாம்

Raghu Thatha: கலவை விமர்சனம், நல்ல வசூல்..கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கலக்கிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்
Raghu Thatha: கலவை விமர்சனம், நல்ல வசூல்..கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கலக்கிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

தி பேமிலி மேன், கன்ஸ் ஆஃப் குலாப் வெப் சீரிஸ் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான சுமன் குமார் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

படத்தில் பல்வேறு நிஜ வாழ்க்கை சம்பவங்களும், ரெபரென்ஸுகளும் இடம்பிடித்திருந்தன. இது கதையுடன் ஒன்றிபோகும் விதமாக அமைந்திருந்தன. ரசிகர்களை கவர்ந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் ஓரளவு வசூலை ஈட்டியது.

ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ்

இந்த படம் வெளியாகி வரும் வாரத்துடன் ஒரு மாத காலம் ஆக இருக்கும் நிலையில், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி தளத்தில் ரகு தாத்தா திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ஜீ5 ஓடிடி செப்டம்பர் 13 முதல் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

கயல்விழியாக வாழ்ந்த கீர்த்தி சுரேஷ்

ரகு தாத்தா படத்தில் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி அவர் கூறும்போது, "கயல்விழியின் நம்பிக்கையில் உறுதியாக நிற்கும் கதாபாத்திரத்தை சித்தரிப்பதாகவும், சிறப்பான பயணமாகவும் அமைந்தது.

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த கதையை ஜீ5 இல் பார்த்து, அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியுள்ளார்.

ரகு தாத்தா கதை

1960களின் பிற்பகுதியில்/1970களின் முற்பகுதியில், தமிழ்நாட்டில் இருக்கும் வள்ளுவன்பேட்டை என்ற சிறிய கிராமத்தின் பின்னணியில் கதை தொடங்குகிறது. அங்கு 25 வயதான கயல்விழி பாண்டியன் கிராமத்து பெண்ணாக மட்டுமல்லாமல் பட்டம் முடித்து, மெட்ராஸ் சென்ட்ரல் வங்கியில் வேலை செய்பவராக இருக்கிறார்.

சில உறுதியான கொள்கைகளைக் கொண்டிருக்கும் கயல், தனது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது அன்பான தாத்தா ரகு தாத்தா (எம்.எஸ். பாஸ்கர்) ஆகியோருடன் வீட்டில் வசிக்கிறார்.

பெண்ணியவாதியான கயல், கே பாண்டியன் என்ற புனைப்பெயரில் எழுத்தாளராகவும் திகழ்கிறார். இந்தி மொழியை வெறுக்கும் கயல், தனது கிராமத்தில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, அங்கே திறக்கப்பட்ட ஏக்தா சபையை (இந்தி சபை) தன் தாத்தாவுடன் இணைந்து மூடுகிறார்.

சுதந்திரமாக இருந்து வரும் கயலின் வாழ்க்கையில் பெற்றோரின் தொடர்ச்சியான அழுத்தம், தனது தாத்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் பாதிப்பு போன்ற காரணத்தால் திருப்புமுனை ஏற்படுகிறது. இதனால் பல விஷயங்கள் வியத்தகு முறையில் மாறுகின்றன.

தான் இறப்பதற்கு முன், புஹாரி பிரியாணி சாப்பிடுவது, எம்ஜிஆருடன் புகைப்படம் எடுப்பது, கயலின் திருமணத்தை பார்ப்பது என மூன்று எளிய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கயலின் தாத்தா கூறுகிறார்.

கயல் குடும்ப அழுத்தத்துக்கு அடிபணிந்து, மக்களின் நலனுக்காக உழைக்கும் மற்றும் அன்பான அனைத்தையும் நம்பும் பொறியாளரான தனது நண்பரான செல்வனை (ரவீந்திர விஜய்) திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

கயல் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் போது முழு குடும்பமும் பரவசத்தில் இருக்கிறது, அப்போது வரை மொட்டை கடிதாசியால் சில திருப்பங்கள் ஏற்படுகிறது. அந்த கடிதத்தை அனுப்பியது யார், ஏன்? கயலின் திருமணம் என்னவானது என்பதை அரசியல் கலந்த காமெடியுடன், சில துணிச்சலான கருத்துகளையும் கூறி படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

கீர்த்தி சுரேஷ் புதிய படங்கள்

தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக் பேபி ஜான், ரிவாவ்வர் ரிடா, கன்னிவெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதில் பேபி ஜான் படம் மூலம் அவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் வருண் தவான் ஜோடியாக நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.