வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்! நன்றித் தெரிவித்த துணை முதல்வர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்! நன்றித் தெரிவித்த துணை முதல்வர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்! நன்றித் தெரிவித்த துணை முதல்வர்!

Suguna Devi P HT Tamil
Dec 04, 2024 07:49 PM IST

ச்

புயலுக்கு நிவாரணம் அளித்த சிவ கார்த்திகேயன்! நன்றி தெரிவித்த துணை முதல்வர்! எவ்வளவு தெரியுமா?
புயலுக்கு நிவாரணம் அளித்த சிவ கார்த்திகேயன்! நன்றி தெரிவித்த துணை முதல்வர்! எவ்வளவு தெரியுமா?

வரலாறு காணாத அளவிற்கு புதுச்சேரியில் 47 செ,மீ அளவுள்ள மழைப்பொழிவு இருந்தது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மூன்று நாட்களுக்கு மேல் தண்ணீர் வடியாமல் இருந்து வருகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையில் நடந்த மலைச்சரிவில் அந்த மலையின் அருகே இருந்த வீட்டின் மீது பெரும் ராட்சச பாறை விழுந்தது. இந்த மண் சரிவு ஏற்பட்ட அந்த வீட்டில் இருந்த 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.

நிவாரண முகாம்கள்

 இவ்வாறு ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் ஒரு காட்டு காட்டியுள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர் .இதனால் பல மாவட்டங்களில் மக்கள் தமிழக அரசின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களது மருத்துவ தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

 மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறும் கூறப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து கள நிலவரத்தை ஆராய்ந்து வருகின்றனர். மக்களும் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்.

சிவ கார்த்திகேயன் உதவி

 தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சத்தை காசோலையாக வழங்கி உள்ளார். இதற்கு துணை முதலமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், “ஃபெஞ்சல் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன்

, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் ரூ.300 கோடி வசூலைத் தாண்டி வசூலித்து வருகிறது. 25 நாட்களைக் கடந்தும் தமிழ்நாட்டின் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இந்த செயலால் சிவ கார்த்திகேயனை பலரும் பாராட்டி வருகின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.