IMDBஇன் டாப் 10 இந்திய நட்சத்திரங்கள் 2024.. லிஸ்டில் இடம்பிடித்த சமந்தா, சோபிதா! டாப் இடத்தில் கவர்ச்சி புயல்
Dec 12, 2024, 09:37 PM IST
Most Popular Indian Stars of 2024: டாப் 10 இந்தியட்சத்திரங்கள் 2024 லிஸ்டில் இரண்டு தென்னிந்திய பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தி லிஸ்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
2024ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் இன்னும் சில வாரங்களில் புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகிறோம். இந்த நேரத்தில் நடப்பாண்டில் இதுவரை நடந்த சிறப்பான விஷயங்கள் முதல் சங்கடத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய விஷயங்கள் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கைகளில் இணையத்தை பின்னியிருக்கும் நாம் ஒவ்வொருவரும் இந்த ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் அதிக தேடப்பட்ட இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது எம்டிபி (IMDB) இணையத்தளம்.
இந்தியாவில் பிரபலமான டாப் 10 நட்சத்திரங்கள் 2024 லிஸ்ட் பின்பருமாறு
- திரிப்தி திம்ரி
- தீபிகா படுகோன்
- இஷான் கட்டர்
- ஷாருக்கான்
- ஷோபிதா துலிபாலா
- ஷர்வரி
- ஐஸ்வர்யா ராய் பச்சன்
- சமந்தா
- ஆலியா பட்
- பிரபாஸ்
இந்த லிஸ்டில் நடிகை சமந்தா, பிரபாஸ் ஆகியோர் தென்னிந்தியாவை சேர்ந்த பிரபலமாக உள்ளார்கள். அதேபோல் சோபிதா துலிபாலா ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் பாலிவுட் படங்கள் மூலமே பிரபலமாகியுள்ளார்.
கவர்ச்சி மூலம் கிறங்கடித்த திரிப்தி
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான அனிமல் படத்தில் திருப்புமுனை கதாபாத்திரமாக தோன்ற தனது அழகு மற்றும் கவர்ச்சி மூலம் ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை திரிப்தி திம்ரி. அனிமல் படத்தில் ரன்பிருடனான நெருக்கமான காட்சியில் டாப்லெஸ் ஆக நடித்து ரசிகர்களை சூடாக்கினார்.
இந்த படத்துக்கு பின்னர் நடித்த காலா, புல்புல், லைலா மஞ்னு, பூல் பூலைய்யா 2 போன்ற படங்களிலும் கவர்ச்சி களியாட்டம் ஆடியிருக்கும் திரிப்தி திம்ரி, கூகுள் அடிக்கடி ட்ரெண்டாகும் நடிகையாகவே வலம் வந்தார். இதையடுத்து இவர் இந்த லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளார்.
அதேபோல் மூன்றாவது இடத்தில் இருக்கும் 29 வயதாகும் இஷான் கட்டர் பியாண்ட் தி கிளவுட்ஸ், ஏ சூட்டபிள் பாய்ஸ் போன்ற படம் மூலம் பிரபலமானாரர். ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனுடன் இணைந்து தி பெர்பெக்ட் கப்பில் என்ற வெப்சீரிஸில் நடித்து சர்வதேச அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் பிரபல நடிகர்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
லைம் லைட்டில் உலா வந்த சமந்தா
இந்த ஆண்டில் சமந்தா நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை. கடந்த நவம்பர் மாதம் அவரது பாலிவுட் என்ட்ரி அமைந்த சிட்டாடல்: ஹனி பன்னி வெப் சீரிஸ் மட்டும் வெளியாகியுள்ளது. இருப்பினும் போட்டோஷுட் புகைப்படங்கள், போட்காஸ்ட் என லைம் லைட்டிலேயே இருந்து வந்துள்ளார். அத்துடன் சமந்தாவின் உடல்நிலை, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது இணைய உலகில் ட்ரெண்டிங் நபராகவே அவரை வைத்திருந்தது.
இதேபோல் பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக உருவெடுத்த பிரபாஸ் அதன் பின்னர் அவர் நடித்த படங்களை அனைத்தும் இந்தியா முழுவதும் வெளியாவது என்பது வழக்கமாகியுள்ளது. இந்த ஆண்டில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது. இந்த படம் மூலம் பிரபலமடைந்த பிரபாஸ், அடுத்த லைப்பின் இருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்கள் மூலம் டாப் 10 இடத்தில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டில் முதல் இடத்தில் இருந்த ஷாருக்கான், இந்த ஆண்டில் நான்காவது இடத்துக்கு இறங்கியுள்ளார். தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆலியா பட் போன்றோர் எப்போது அதிகமாக தேடப்படும் பாலிவுட் பிரபலங்களில் ஒருவராக இருப்பார்கள். அது இந்த ஆண்டு தொடர்ந்திருக்கிறது.
ஹாலிவுட் பயணம், திருமணம் மூலம் சோபிதா உச்சம்
பொன்னியின் செல்வன் சீரிஸ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் சோபிதா துலிபாலா. இதையடுத்து இவர் மங்கி மேன் என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இந்திய நடிகையாக உருவெடுத்தார். அத்துடன் இந்த ஆண்டில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் நாடு முழுவதும் பேசப்படும், தேடப்படும் நடிகையாக உருவெடுத்தார்.
27 வயதாகும் ஷர்வரி, உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி தற்போது நடிகையாக மாறியுள்ளார். திரையரங்குகளில் வெளியாக தடை செய்யப்பட்டு ஓடிடியில் வெளியான மகாராஜ் படம் மூலம் புகழ் பெற்ற இவர், அதன் பின்னர் வெளியான வேதா படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். இதன் பின்னர் ட்ரெண்டிங் நடிகையாக உருவெடுத்த ஷ்ரவரி தற்போது டாப் பிரபலங்கள் லிஸ்டிலும் இடம்பிடித்துள்ளார்.