பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா! இது தான் காரணமா? வெளிவந்த தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா! இது தான் காரணமா? வெளிவந்த தகவல்!

பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா! இது தான் காரணமா? வெளிவந்த தகவல்!

Suguna Devi P HT Tamil
Nov 05, 2024 02:29 PM IST

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி, இவர் தமிழில் விஜய், அஜித், ரஜினி ஆகியோருடனும் தெலுங்கில் நாகார்ஜுனா, ரவி தேஜா, பிரபாஸ் ஆகியோருடனும் நடித்துள்ளார்.

பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா! இது தான் காரணமா? வெளிவந்த தகவல்!
பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா! இது தான் காரணமா? வெளிவந்த தகவல்!

அனுஷ்கா ஷெட்டி 

தமிழில் 2006 ஆம் ஆண்டு ரெண்டு படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டு தமிழில் டப் செய்து வந்த அருந்ததி படமே தமிழ் ரசிகர்களுக்கு இவரை பரீட்சையப்படுத்தியது. மேலும் அதனைத் தொடர்ந்து விஜயுடன் வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்தார். நடிகர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்திலும் நடித்து இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்காக அதிகப்படியான அளவில் உடல் எடையை அதிகரித்தார். இருப்பினும் மீண்டும் அவரது எடையை குறைக்க முடியவில்லை. இப்படத்திற்கு பின் அவர் நடித்த பாகுபலி படத்திலும் சற்று உடல் பருமனுடன் காணப்பட்டார். 

கடந்த 2020 ஆம் ஆண்டில் நிசப்தம் எனும் படத்தில் நடித்து இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு மிஸ்டர் அண்ட் மிர்ஸஸ் பொலி ஷெட்டி படமும் வெளியாகி இருந்தது. தற்போது வரை அனுஷ்காவிற்கு கம்பேக் படமாக எந்த படமும் அமையவில்லை. 

உடல் எடைதான் காரணமா? 

நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்த அனைத்து படங்களிலும் இருவருக்கும் பக்காவாக ஜோடி பொருத்தம் அமைந்திருக்கும். இந்நிலையில் பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் நடிக்க கமிட் ஆகிய படம் சாஹோ. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் நடித்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் முதலில் அனுஷிகாவே நடிக்க இருந்ததாகவும், அவரது உடல் எடை காரணமாக அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . 

மேலும் இப்பட வாய்ப்பு வந்த பொழுது அதிக உடற்பயிற்சி செய்து உடலை குறைக்க அனுஷ்கா முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. உடல் எடை காரணமாக அனுஷ்கா நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் பாகுபலி படம் வெளியான பொழுது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வருவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் இதனை மறுத்து இருந்தனர்.  தற்போது வரை அனுஷகாவால் மீண்டும் ஒரு வெற்றி படத்தில் நடிக்க முடியாமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் கேள்வியாகவே இருந்து வருகிறது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.