தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maharaj Movie Ban: உண்மை சம்பவத்தால் சர்ச்சை! அமீர்கான் மகன் ஜூனத் கான் அறிமுகமாகும் மகாராஜ் படத்துக்கு இடைக்கால தடை

Maharaj Movie Ban: உண்மை சம்பவத்தால் சர்ச்சை! அமீர்கான் மகன் ஜூனத் கான் அறிமுகமாகும் மகாராஜ் படத்துக்கு இடைக்கால தடை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 14, 2024 02:45 PM IST

அமீர்கானின் மகன் ஜுனைத் கான் சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கிய மகாராஜ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வெளியீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் படத்தின் ரிலீஸுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. படத்தின் கதையில் உள்ள உண்மை சம்பவத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

அமீர்கான் மகன் ஜூனத் கான் அறிமுகமாகும் மகாராஜ் படத்துக்கு இடைக்கால தடை
அமீர்கான் மகன் ஜூனத் கான் அறிமுகமாகும் மகாராஜ் படத்துக்கு இடைக்கால தடை

மகாராஜ் படம் தொடர்பான சர்ச்சை

மகாராஜ் படத்துக்கு எதிராக கிருஷ்ண பக்தர்கள் மற்றும் புஷ்டிமார்க் பிரிவான வல்லபாச்சார்யாவை பின்பற்றுபவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "1862 ஆம் ஆண்டின் மகாராஜ் அவதூறு வழக்கை சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், பிரிவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடும்" என்ற கூறப்பட்டிருந்தது.

1862ஆம் ஆண்டின் மகாராஜ் அவதூறு வழக்கில், முக்கிய நபரின் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், பம்பாய் உச்ச நீதிமன்றத்தின் ஆங்கிலேய நீதிபதிகளால் தீர்ப்பளிக்கப்பட்டது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பகவான் கிருஷ்ணருக்கு எதிராகவும், பக்தி பாடல்களுக்கு எதிராகவும் கடுமையான அவதூறு கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் வாதிடப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

இடைக்கால தடை

இதற்கிடையே, படத்தை டிரெய்லர் உட்பட போதுமான விளம்பர யுத்திகள் இல்லாமல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை மட்டுப்படுத்தி வெளியிட இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே மத உணர்வுகளை கடுமையாக காயப்படுத்தலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா விஷன், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அத்துடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மகாராஜ் பட கதைச்சுருக்கம்

இந்த படம் தொடர்பாக பிரபல ஸ்ட்ரீமிங் நிறுவனம், "1862ஆம் ஆண்டு, இந்தியாவில் மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்த நேரம், ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு வயது தான் எனவும், 1857இல் இந்திய சுதந்திரத்துக்காக சிப்பாய் புரட்சியானாது தீப்பிழம்புகளை தொடர்ந்து விசிறி வரும் நிலையில், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, ஒரு மனிதன் மைல்கல் சட்டப் போராட்டத்தில் தைரியமான நிலைப்பாட்டை எடுக்கிறான். ஒரு உண்மைக் கதை மகராஜ் படம் மூலம், 160 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது." என்று படத்தின் கதைச்சுருக்கமாக பகிர்ந்துள்ளது.

இவற்றுடன் "கர்சந்தாஸ் முல்ஜி என்ற பத்திரிகையாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமைகள் மற்றும் சமூக சீர்திருத்தத்துக்கான முன்னோடி வழக்கறிஞராக இருந்தார். மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரி மாணவரும், அறிஞர், தலைவர் தாதாபாய் நௌரோஜியின் பாதுகாவலரான இவர், விதவை மறுமணம் குறித்து எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவராகவும், சமூகத்தில் சீர்திருத்த விதைகளை விதைத்தவராகவும் இருந்துள்ளார்.

1862ஆம் ஆண்டின் மகாராஜ் அவதூறு வழக்கில், முக்கிய நபரின் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளால் பற்றவைக்கப்பட்டது. இந்த வழக்கு பரவலான கவனத்தை அப்போது. இது எல்லா காலத்திலும் மிக முக்கியமான சட்டப் போர்களில் ஒன்றாக பலர் கருதுவதற்கு களம் அமைத்தது," என்றும் அந்த கதை சுருக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

தற்போது இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே, '#BoycottNetflix', மற்றும் '#BanMaharajFilm' போன்ற ஹேஷ்டேக்குகள் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகின.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்