சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்.. ரஜினிக்கு 3.5 உயர சிலையுடன் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா! டாப் சினிமா செய்திகள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்.. ரஜினிக்கு 3.5 உயர சிலையுடன் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா! டாப் சினிமா செய்திகள் இன்று

சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்.. ரஜினிக்கு 3.5 உயர சிலையுடன் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா! டாப் சினிமா செய்திகள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 11, 2024 11:50 PM IST

சமந்தாவுக்கு புதிய பார்ட்னர், ரஜினிக்கு 3.5 உயர சிலையில் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா, 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டும் ஏ சான்றிதழ் பெற்ற படம் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவை என்பதை பார்க்கலாம்

சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்.. ரஜினிக்கு 3.5 உயர சிலையுடன் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா! டாப் சினிமா செய்திகள் இன்று
சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்.. ரஜினிக்கு 3.5 உயர சிலையுடன் கோயில், சீனாவில் கலக்கும் மகராஜா! டாப் சினிமா செய்திகள் இன்று

வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் என கூறிய சிங்கமுத்து

வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை என நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஐந்து கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாகப் பேசத் தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

20 நிமிட காட்சியை நீக்கியும் ஏ சான்றிதழ்

பரத் நடிப்பில் வெளியாக இருக்கும் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் வெளியாக இருக்கிறது. பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் உள்பட நடித்து க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்தில் இடம்பிடித்த 20 நிமிட காட்சிகளை நீக்கப்பட்டும் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. த்ரில்லர் படமாக இருந்தாலும் வன்முறை, ஆபாச காட்சிகள் இல்லாமல் படம உருவாகியிருந்தாலும், படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை நீக்கினால் யுஏ சான்றிதழ் தரப்படும் என கூறப்பட்டதாகவும், அந்த காட்சிகளை நீக்கிய பிறகும் ஏ சான்றிதழை அளிக்கப்பட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

திருப்பதி கோயிலில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட படம்

தெலுங்கில் வெளியான ‘35 சின்ன கத காடு’ என்ற படத்தில் இடம்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் காட்சிகள் சர்ச்சையில் கிளப்பியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் ஓடிடியில் வெளியான இந்த படம் பெரிதாக கவனிக்கப்படாவிட்டாலும் படத்தில், நாயகன், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், படத்தில் ஏழுமலையான் கோயிலை சுற்றி பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதனை படம் பிடிப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, திருப்பதி கோயில் தேவஸ்தானத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது

மும்பை வீட்டை வாடகைக்கு விட்ட ஆமிர்கான்

மும்பையில் இருக்கும் தனது வீட்டை ரூ. 6.50 லட்சத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர்கான். மும்பை பாந்த்ரா பல்லி ஹில் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் ஆமிர்கானுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை 5 வருடத்துக்காக ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளாராம் ஆமிர்கான்.

முதல் வருடம் 6.50 லட்சம் ரூபாயை வாடகையாகவும் இரண்டாம் வருடம் 6.82 லட்சமாகவும் மூன்றாவது வருடம் 7.16 லட்சமாகவும் நான்காவது வருடம் 7.52 லட்சமும் ஐந்தாம் வருடத்தில் 7.90 லட்சமும் என வாடகைத் தொகையை அவர் நிர்ணயித்துள்ளார். இந்த வீட்டில் ஜிம், நீச்சல் குளம், மினி தியேட்டர் வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாடகைத் தொகை தனது மாஜி மனைவி கிரண் ராவுக்கு கிடைக்கும்படி ஆமிர்கான் ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம்.

ஜெயம் ரவி படத்துக்காக இணையும் கெளதம் மேனன் - வெற்றிமாறன் கூட்டணி

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக இருந்து வரும் ஜெயம் ரவி, வெற்றிமாறன் கதையில், கெளதம் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். வெற்றிமாறன் கதையை கேட்டதும், அந்த கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் தனக்கு ஏற்பட்டதாகவும், இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஜெயம் ரவி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சீனா பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் மகாராஜா

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது படம் சீனாவில் வெளியாகியுள்ளது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கும் இந்த படம் சீனாவில் 9 நாள்களில் ரூ. 56.85 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் ரூ. 150 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராப் செய்யப்படும் இளையராஜா பயோபிக்

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கமல்ஹாசன் திரைக்கதை அமைக்க, தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கான இசைகளை இளையராஜாவின் பல படங்களில் பயன்படுத்திய இசைகளில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கனெக்ட் மீடியா, பிகே புரொடக்‌ஷன்ஸ், மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது.

நடிகர் தனுஷ் குபேரா படத்தை முடித்துவிட்டு இளையராஜா பயோபிக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றிய எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. படக்குழுவினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா பயோபிக் திரைப்படம் ட்ராப் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லக்கி பாஸ்கர் படம் பார்த்து காணாமல் போன மாணவர்கள்

லக்கி பாஸ்கர் படத்தில் வரும் துல்கர் சல்மான் போல் பணம், வீடு, கார் ஆகிவற்றை சம்பாதித்து திரும்புகிறோம் என்று நண்பர்களிடம் கூறி ஹாஸ்டலில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிப்பேட்டையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளி ஹாஸ்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவர்களை தேடி வருகின்றனர்.

அடுத்த ஆண்டில் சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்

2025ஆம் ஆண்டில் தனது ராசிக்கான ஜோதிட பலன்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. அதில் நேர்மையான, அன்பான பார்ட்னர் அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், சமந்தா இடையே காதல் பூத்திருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் தகவல்கள் உலா வருகின்றன. அதன்படி, மும்பைக்கு செல்லும்போதெல்லாம் நடிகர் அர்ஜுன் கபூர் வீட்டில் தான் தங்கி வருகிறாராம்.

படப்பிடிப்பில் பங்கேற்றால் அர்ஜுன் கபூர் வீட்டில் இருந்து தான் சமந்தாவுக்கு சாப்பாடு வருகிறது. தன்னை விட வயது மூத்த நடிகையான மலைக்கா அரோராவை திருமணம் செய்து கொண்ட அர்ஜுன் கபூர் சமீபத்தில் அவரை பிரிந்தார்.

இதையடுத்து தங்களது ஜோடிகளை பிரிந்த அர்ஜுன் கபூர், சமந்தா ஆகியோருக்கு இடையே நட்பு உருவாகி, தற்போது நெருக்க ஏற்பட்டுள்ளது. சமந்தா, அர்ஜுன் ஆகியோர் காதலில் இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் தகவல்கள் பரப்பி வரும் நிலையில், இதற்கு எந்த மறுப்பும் இருவரும் தெரிவிக்காமல் உள்ளனர்.

2024 ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இரண்டு தமிழ் படங்கள்

2024 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 படங்களின் லிஸ்டில் விஜய் சேதுபதி மகாராஜா, தளபதி விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான பாலிவுட் படமான ஸ்த்ரீ 2 படம் இந்த லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது.

300 கிலோ எடையில் 3.5 அடி உயரத்தில் ரஜினிக்கு சிலை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் மீது கொண்டுள்ள அபிமானத்தில் 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்' ஒன்றை உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார். ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளை திரைப்படத்தின் ரஜினி கதாபாத்திரத்தின் அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலையாக உள்ளது.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.