தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Shobana : நடிகை.. பிரபல பரத நாட்டிய கலைஞர்.. சுப்புலட்சுமி நியாபகம் இருக்கா மக்களே.. நடிகை ஷோபனா பிறந்தநாள் இன்று!

HBD Shobana : நடிகை.. பிரபல பரத நாட்டிய கலைஞர்.. சுப்புலட்சுமி நியாபகம் இருக்கா மக்களே.. நடிகை ஷோபனா பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil

Mar 21, 2024, 06:42 PM IST

google News
HBD Shobana : நடிகை ஷோபனா தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்து அசத்தி இருப்பார்.
HBD Shobana : நடிகை ஷோபனா தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்து அசத்தி இருப்பார்.

HBD Shobana : நடிகை ஷோபனா தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்து அசத்தி இருப்பார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி இப்படி அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகை ஷோபனா. இவர் 1970ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் ஒரு நடிகை மட்டும் இல்லை பிரபல பரத நாட்டிய கலைஞர். இவரின் முழுப் பெயர் ஷோபனா சந்தரகுமாரி பிள்ளை ஆகும்.

ஷோபனா தனது பள்ளிப்படிப்பை கோவை புனித தோமையர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். இவர் திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரின் மருமகள் என்ற பெருமையும் உள்ளது. இவர்கள் மூவரும் பாரம்பரிய இந்திய நடனக் கலைஞர்கள்.இவர்களும் சினிமா துறையில் நாயகிகாளாக நடித்துள்ளனர். நடிகை சுகுமாரி ஷோபனாவின் அத்தை.

ஷோபனா 1999 ஆம் ஆண்டில் நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து ஜெர்மனியின் மியூனிக்கில் நடந்த மைக்கேல் ஜாக்சன் அண்ட் பிரண்ட்ஸ் இசை நிகழ்ச்சியில் தனது நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அதேபோல 2000 ஆம் ஆண்டில் மணிரத்தனத்தின் மேடை நிகழ்ச்சியான நேற்று, இன்று, நாளை என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருந்தார். 1994 ஆம் ஆண்டில் தான் சென்னையில் பாரம்பரிய நடனத்திற்காக கலார்ப்பனா என்ற ஒரு நாட்டியப் பள்ளியை நிறுவினார் ஷோபனா.

இவர் தமிழில் நடித்த படங்கள்

எனக்குள் ஒருவன்

விரதம்

இது நம்ம ஆளு

சட்டத்தின் திறப்பு விழா

பாட்டுக்கு ஒரு தலைவன்

சிவா

பொன்மன செல்வன்

வாத்தியார் வீட்டுப் பிள்ளை

எங்கிட்ட மோதாதே

தளபதி

போடா போடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்து அசத்தி இருப்பார். இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி ஆகியோரின் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தளபதி.

இளையராஜா இசையமைத்த இந்தப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா,பானுப்பிரியா,ஷோபனா, கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். இதில் ரஜினியின் காதலியாக வரும் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ஷோபனா நடித்து அசத்தி இருப்பார். சுப்புலட்சுமி என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பெற்றது என்றே சொல்லலாம்.

மலையாளத்தில் இவர் கிட்டத்தட்ட 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஜி.அரவிந்தன், இயக்குனர் கே.பாலச்சந்தர், இயக்குனர் மணிரத்னம், இயக்குனர் பரதன், இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குனர்ஏ.எம்.ஃபாசில், இயக்குனர் பிரியதர்சன் போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

விருதுகள்

இரண்டு தேசிய திரைப்பட விருதுகள்

ஒரு கேரள மாநில திரைப்பட விருது

1993 ஆம் ஆண்டு மனிசித்ரதாலு படத்திற்கும் மற்றும் மிட்ர் மை ஃப்ரண்ட் படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

பத்மஸ்ரீ விருது

கலைமாமணி விருது

கிரேடு ஏ டாப் விருது

கலை ரத்னா விருது

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த படம் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி. 2012ஆம் ஆண்டு வெளியான இந்த போட போடி படத்தில் வரலட்சுமியின் அம்மாவாக மிகவும் மார்டன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அதேபோல 2019ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் நான்கில் நடுவராக பணியாற்றி இருப்பார்.

இவ்வாறு பிஸியாக இருக்கும் ஷோபனா அடிக்கடி பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடி வருகிறார். இவர் இதுவரையும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஷோபனா ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். ஷோபனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி