Nita And Mukesh Ambani: பரத நாட்டியம் கொடுத்த கான்ஃபிடன்ஸ்; அம்பானியை அலறவிட்ட நீதா! - முகேஷ் - நீதா காதல் கதை!
இதனை எடுத்து நேரடியாகவே நீதாவின் வீட்டிற்குச் சென்றார் திருபாய் அம்பானி. அங்கு சென்று தன்னுடைய மகனுக்கு நிதாவை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கேட்க, அவர்களுக்கு இரண்டு நிபந்தனைகள் விதித்தார் நீதா.
பிரபல தொழிலதிபர் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் காதல் கதையை இங்கு பார்க்கலாம்.
நீதா அம்பானிக்கு சிறுவயதில் இருந்தே பரதநாட்டியம் என்றால் அவ்வளவு இஷ்டம். இந்த நிலையில், சிவராத்திரி விழா ஒன்றிற்கு அவர் பரதநாட்டியம் ஆடினார். அந்த நிகழ்விற்கு பிரபல மறைந்த தொழிலதிபரான திருபாய் அம்பானி வந்து இருந்தார். நீதாவை பார்த்த மறுகணமே, அவருக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது.
அதனை தொடர்ந்து அவரது மொபைல் எண்ணை வாங்கி, நீ தாவை தொடர்பு கொண்டார். இந்த பக்கம் போனில் நான் அம்பானி பேசுகிறேன் என்று அவர் சொன்னவுடன், அந்த பக்கம் இருந்து நீதா யாரோ நம்மை கிண்டல் அடிக்கிறார்கள் என்று நினைத்து, நான் எலிசபெத் குயின் பேசுகிறேன் என்று சொல்லி போனை கட் செய்து இருக்கிறார்.
இதனை எடுத்து நேரடியாகவே நீதாவின் வீட்டிற்குச் சென்றார் திருபாய் அம்பானி. அங்கு சென்று தன்னுடைய மகனுக்கு நிதாவை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கேட்க, அவர்களுக்கு இரண்டு நிபந்தனைகள் விதித்தார் நீதா.
அப்போது நீதா டீச்சராக வேலை பார்த்து கொண்டு இருந்தார். அந்த வேலைக்கு அவருக்கு 800 ரூபாய் சம்பளம் கிடைத்து வந்தது. அந்த வேலையை கல்யாணம் முடிந்த பின்னரும் தொடர்வேன் என்பது முதல் நிபந்தனை. இன்னொரு நிபந்தனை, பரதநாட்டியம் ஆடுவதை எப்பொழுதும் தடுக்க கூடாது என்பது.. இதற்கு ஓகே கிடைக்க, முகேஷ் அம்பானிக்கு மிடில் கிளாஸ் லைஃப் பிடிக்கிறதா என்று சோதனை செய்ய, அவரை டபுள் டக்கர் பஸ், ரோட்டோர கடை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது முகேஷ் அம்பானிக்கு மிடில் கிளாஸ் லைஃப் செட் ஆகிறது என்பதை புரிந்து கொண்டார். இதனை தொடர்ந்து தான் அவர் முகேஷ் அம்பானியை கரம் பிடித்தார். கரம் பிடித்த பின்னரும் சில காலம், தன்னுடைய அந்த டீச்சர் வேலையை பார்த்தார் நீதா! நீதாவிற்கு அப்போது அந்தளவிற்கு தன்னபிக்கை கொடுத்தது அவர் ஆடிய வந்த பரத நாட்டியம். ஆகையால் பல கோடிகள் செலவு செய்து, பல்லாயிரம் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு கலையையோ, விளையாட்டையோ புகுத்த முயற்சி செய்து வருகிறார்.
டாபிக்ஸ்