24 Years of Time Movie: பிரபுதேவா நடிப்பில் ஒரு ஃபீல் குட் காதல் கதை டைம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  24 Years Of Time Movie: பிரபுதேவா நடிப்பில் ஒரு ஃபீல் குட் காதல் கதை டைம்!

24 Years of Time Movie: பிரபுதேவா நடிப்பில் ஒரு ஃபீல் குட் காதல் கதை டைம்!

Marimuthu M HT Tamil
Dec 03, 2023 07:20 AM IST

டைம் திரைப்படம் வெளியாகி 24ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

பிரபுதேவா நடிப்பில் ஒரு ஃபீல் குட் காதல் கதை டைம்!
பிரபுதேவா நடிப்பில் ஒரு ஃபீல் குட் காதல் கதை டைம்!

டைம் திரைப்படத்தின் கதை என்ன? ஸ்ரீநிவாசமூர்த்தி(பிரபுதேவா) என்ற ஏழை இளைஞர் தனது திருமணத்துக்காக தனிப்பட்ட முறையில் விரும்பி தினசரி நாளிதழில் விளம்பரம் தருகிறார். அதன்மூலம் ஈர்க்கப்பட்ட துளசி(சிம்ரன்) மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜனிடம்(நாசர்) இருந்து நேர்மறையான பதிலைப் பெறுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தொலைபேசியில் பேசி காதலை வளர்க்கின்றனர். இந்த திருமணத்தை நிச்சயம் செய்ய உதவுமாறு தனது உயிர் நண்பன் திலீப்பின் (பப்லு பிருதிவிராஜ்)தந்தையின் உதவியை நாடுகிறான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திலீப்பின் தந்தைக்கும் கோவிந்தராஜனுக்கும் இடையே ஒரு மோசமான பகை உள்ளது. இதனால் திருமண நிச்சயம் முறிகிறது. வேதனையில் கோவிந்தராஜன் தற்கொலை செய்கிறார். இதிலிருந்து மீளமுடியாத துளசி சிங்கப்பூர் செல்கிறாள். அங்கு படித்துக்கொண்டிருக்கும் திலீப் ஒரு விபத்தில் சிக்க அவரை மீட்டெடுக்கிறார், துளசி. மருத்துவமனையில் இருந்து எழுந்ததும் திலீப் துளசியை ஒருதலைப்பட்சமாக காதலிக்கிறான். ஆனால், எதிர்பாராவிதமாக ஸ்ரீநிவாசமூர்த்தியும் சிங்கப்பூர் வருகிறார். தனது உயிர் நண்பர் தனது பழைய காதலியை மணக்க ஆசைப்படுவதை உணர்ந்து வெறுப்பில் இந்தியா திரும்புகிறான். துளசியும்,திலீப் உடனான திருமணத்துக்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு, இறுதியில் உதறிவிடுகிறாள். கடைசியாக அவளும் இந்தியா திரும்பிவிடுகிறாள். துளசியும் ஸ்ரீநிவாசாவும் எப்படி இணைகிறார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

நடிப்பு: இப்படத்தில் பிரபுதேவா, சிம்ரன் தவிர, பிரியாவாக ராதிகா சவுத்ரியும், சீனிவாசமூர்த்தியின் நண்பனாக சார்லியும், திலீப்பின் தந்தை சீதாராமனாக தேவனும் அப்பாசாமி என்னும் கதாபாத்திரத்தில் மணிவண்ணனும், பிரியாவின் அப்பாவாக பாண்டும் நடித்துள்ளனர்.

இசை: இப்படத்தின் இசையை இளையராஜாவும் பாடல்களை பழனி பாரதியும் எழுதியுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களில் காதல் நீதானா.. காதல் நீதானா, தவிக்கிறேன்.. தவிக்கிறேன் ஆகிய இரண்டு பாடல்களும் இப்போதும் பலரது ஃபேவரைட் ரகமாக மாறியுள்ளது.

படம் வெளியாகி இன்றுடன்(டிசம்பர் 12,2023) 24 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இப்போது பார்த்தாலும் ரசித்துப் பார்க்கவைக்கும் காட்சி அமைப்புகளுடன் இருக்கும் ’டைம்’ படம் இன்னும் பலரால் நினைவுகூரப்படும் என்பது உறுதி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.