ஆன்மீக பயணம்: திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆன்மீக பயணம்: திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில்!

ஆன்மீக பயணம்: திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2022 07:03 PM IST

திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோயிலின் சிறப்புகள் குறித்து காண்போம்.

<p>திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோயில்</p>
<p>திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோயில்</p>

இக்கோயிலின் மூலவரான அனந்த பத்மநாப ஸ்வாமியை நம்மாழ்வார் 11 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். மிகப்பெரிய அளவில் திகழ்கின்ற கோயில் தன்னகத்தே சிறந்த கலை அம்சங்களையும் கொண்டுள்ளது.

கோயிலுக்குள் இருக்கின்ற குலசேகர மண்டபத்திற்கு உள்ளே இசை ஒலியை எழுப்புகின்ற தூண்கள் உள்ளன. ஒரு தூணில் எழுகின்ற இசையை மற்றொரு தூணில் கேட்க முடியும்.

இக்கோயிலுக்கு அடித்தளமிட்டு வேலையைத் தொடங்கியது ஸ்ரீ சேரமான் பெருமாள் நாயனார் என்று கல்வெட்டு செய்தி கூறுகிறது. கால ஓட்டத்தில் சில சம்பவங்கள் நடந்த பின்பு, ராஜா மார்த்தாண்ட வர்மாவால் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு மரத்தாலான மூல விக்கிரகம் அகற்றப்பட்டது.  பின்னர்12,000 சால கிராமங்களாலும் கடுச்சக்ரா என்ற அஷ்ட பந்தன கலவையால் உருவாக்கப்பட்ட புதிய அனந்த பத்மநாப சுவாமியை இக்காலத்தில் தரிசிக்கிறோம்.

கடந்த 1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது உறவினர்கள், தளபதி என தனது பரிவாரங்களோடு வந்து தன் ஆட்சிக்கு உட்பட்ட ராஜ்ஜியம் மற்றும் பிற செல்வங்களை ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமிக்கு பட்டயம் எழுதிக்கொடுத்தார்.

பின்னர் தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதி அடைந்தார். அன்று முதல் அந்த அரச பரம்பரையினர் பத்மநாப தாசன் என்று அழைக்கப்படுகின்றனர்.

இக்காலத்தில் ராஜா ஆட்சி இல்லாவிட்டாலும் கூட அந்த அரச பரம்பரையின் இப்போதைய மன்னர், அன்று போல் இன்றும் தினந்தோறும் காலையில் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்லும் பண்பு மாறவில்லை .

மூலவர் ஸ்ரீ அனந்த பத்மநாபனின் திருமேனி மிகவும் பெரியது என்பதால் அவரது சிரம், உடல், திருவடிகள் ஆகியவற்றை 3 வாசல்கள் வழியே தனித்தனியே தரிசிக்க வேண்டும். திருவட்டாறு என்னும் திவ்ய தேசத்திலும் கூட மூன்று வாசல்கள் வழியாக மூலவரைத் தரிசிக்க வேண்டும்.

இக்கோயிலின் மூலவரான ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியின் கருவறைக்கு மேல் ஹேம கூட்ட விமானம் உள்ளது. இக்கோயில் அன்னை ஸ்ரீ ஹரிலட்சுமி

இங்கிருக்கும் ஆஞ்சநேயர் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும், எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவதில்லை என்பது கூட ஒரு அதிசயமாகும்.

இன்கு வந்து ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியை வழிபடுவோருக்கு நோயும், பாவமும் அப்போதே தொலையும் என்று நம்மாழ்வாரை மங்களாசாசனம் சொல்கிறது. கோயில் மூலவரான ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமிக்கு விரதம் இருந்து, சில நாட்கள் மட்டும் தங்கி இருப்பது மிகவும் விசேஷமானதாகும்.

Whats_app_banner