பிக்பாஸில் இது புதுசு.. துரத்தி துரத்தி சம்பவம் செய்த தர்ஷிகா.. கூல் கேப்டன் போல!
Oct 22, 2024, 08:03 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 3வது வாரமே தொடங்கியுள்ள நிலையில், தர்ஷிகா மீண்டும் கேப்டனாகி புது வரலாற்றை படைத்திருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 8 தொடங்கப்பட்டு 2 வாரம் முடிவடைந்த நிலையில், நேற்று 3வது வாரம் தொடங்கியது. அப்போது இந்த வாரத்திற்கான கேப்டனாக யார் வரவேண்டும் என ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ஆலோசித்து அவர்கள் அணியிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் வலியுறுத்தினார்.
ரஞ்சித் vs தர்ஷிகா
இதையடுத்து பெண்கள் அணியிலிருந்து கேப்டனாக தர்ஷிகா 2ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆண்கள் அணியில் ரஞ்சித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் கண்களைக் கட்டிக் கொண்டு, விளையாடும் ஒரு கேமை பிக்பாஸ் பரிந்துரைத்தது. அந்த கேமில் தர்ஷிகா குறைந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றார்.
வரலாறு படைத்த தர்ஷிகா
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 3வது வாரத்திலேயே 2 முறை கேப்டனாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தர்ஷிகா. கடந்த 7 சீசன்களில் ஒரே போட்டியாளர் 2 முறை கேப்டனாக இருந்திருந்தாலும் குறுகிய கால அளவில் மீண்டும் கேப்டனானது தர்ஷிகா தான்.
நாமினேஷன் அறிவிப்பு
பிக்பாஸ் வீட்டின் கேப்டன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. இந்த நாமினேஷனில் போட்டியாளர்கள் எந்த அணியினராக இருந்தாலும் நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்துள்ளது.
கடந்த முறை பெண்கள் அணியினர் ஆண்களையும், ஆண்கள் அணியினர் பெண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என்ற விதி அமலில் இருந்த நிலையில், தற்போது அது தகர்க்கப்பட்டுள்ளது. யார் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்துகொள்ளலாம் என பிக்பாஸ் அறிவித்தது. இதையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 2 வாரத்தில் பெற்ற அனுபவங்களில் இருந்து யாரை வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
நாமினேட் லிஸ்டில் ஜாக்குலின்
அந்தப் ப்ரோமோவின் படி, விஜே விஷால் ஜாக்குலினை நாமினேட் செய்துள்ளார். அவர் சாச்சனாவை ஓவர் ஷேடோ செய்வது போல் உள்ளதால் அவரை நாமினேட் செய்கிறேன் என காரணத்தைக் கூறியுள்ளார்.
கடந்த வார கேப்டனாக இருந்த சத்யாவும் ஜாக்குலினை நாமினேட் செய்துள்ளார். அவர் வேண்டுமென்றே சில விஷயங்களில் ஈடுபடுவது போல் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கேப்டன் சத்யா நாமினேட்
சுனிதா, கடந்த வார கேப்டன் சத்யாவை நாமினேட் செய்துள்ளார். அவர் போட்டிகளில் அவ்வளவு ஈடுபாட்டுடன் பங்கேற்றது போல் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
அன்ஷிதாவும் சத்யாவையே நாமினேட் செய்துள்ளார். இவர் கேப்டனாக இருந்த சமயத்தில் எந்த பிரச்சனைக்கும் முடிவு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
சார்ந்து விளையாடும் அன்ஷிதா
ரஞ்சித், அன்ஷிதாவை நாமினேட் செய்துள்ளார், அன்ஷிதா ஒருவரை சார்ந்தே இருப்பது போல் தோன்றுகிறது எனவும் கூறியுள்ளார்.
அடுத்ததாக வந்த ஜாக்குலின் அன்ஷிதாவை நாமினேட் செய்ததுடன், அவருடைய விளையாட்டில் சுவாரசியம் மிகவும் குறைவாக உள்ளது எனக் காரணம் தெரிவித்துள்ளார்,
சௌந்தர்யா
இதையடுத்து வந்த விஜே ஆனந்தி, சௌந்தர்யாவை நாமினேட் செய்துள்ளார். இதுவரை அவர் அணிக்காக எதுவும் செய்யவில்லையோ என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
பவித்ரா ஜனனி
பவித்ரா ஜனனியை நாமினேட் செய்த முத்துக் குமரன், அவர் மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டி போடுகிறார் என குற்றம்சாட்டினார். இப்படி ஒவ்வொருவரும் கடந்த 2 வாரங்களாக கவனி்த்து வந்த விஷயங்களை குறிப்பிட்டு நாமினேட் செய்துள்ளனர்.
இதனால், பெண்கள் அணியிலிருந்து ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, சௌந்தர்யா, தர்ஷா குப்தாவும், ஆண்கள் அணியிலிருந்து சத்யா, முத்துக் குமரன், அருண் ஆகியோரும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்
டாபிக்ஸ்