எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்! பிக்பாஸில் கதறி அழுத சௌந்தர்யா! இன்றைய புரோமோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்! பிக்பாஸில் கதறி அழுத சௌந்தர்யா! இன்றைய புரோமோ!

எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்! பிக்பாஸில் கதறி அழுத சௌந்தர்யா! இன்றைய புரோமோ!

Suguna Devi P HT Tamil
Oct 21, 2024 04:45 PM IST

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இதில் சௌந்தர்யா கதறி அழுதுள்ளார்.

எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்! பிக்பாஸில் கதறி அழுத சௌந்தர்யா! இன்றைய புரோமோ!
எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்! பிக்பாஸில் கதறி அழுத சௌந்தர்யா! இன்றைய புரோமோ!

பரிமாறப்படும் போட்டியாளர்கள் 

பிக்பாஸ் சீசன் 8 ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வேறு அணியாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு புது விதமான யுக்தி ஆகும். இயல்பாகவே ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவ்வாறு தனி அணியாக பிரித்து வைக்கும் போது  தனது எதிர் அணி என அதிகமான பிரச்சனைகள் வரும். இதையே இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி யுக்தியாக கையாண்டு உள்ளது. 

மேலும் இதனை சுவரசியமானதாக மாற்ற ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் பரிமாறப்படுகிறார். பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும், ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு ஒருவரும் பரிமாறப்படுகிறார்கள். இவ்வாறு பரிமாறப்படும் போட்டியாளர்கள் அவர்களது சொந்த அணிக்கு சாதகமாக செயல்படுகிறார்களா இல்லை சென்ற அணியினரால் மன மாற்றம் அடைகின்றார்களா என்பதே இதன் நோக்கம். இந்த அடிப்படையில் இந்த வாரம் பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கும், ஆண்கள் அணியில் இருந்து ஜெப்ரி பெண்கள் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள போட்டியாளர்களிலேயே இவர்கள் இருவரும் இளம் வயதினர் ஆவர். எனவே இவர்கள் இருவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்

பரிமாறப்படும் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி உள்ளார்கள் என்ற பெயரும் கிடைக்கும். இந்நிலையில் சௌந்தர்யா தன்னை ஏன் ஆண்கள் அணிக்கு அனுப்ப வில்லை என மற்ற பெண் அணியினரிடம் கேட்கிறார். அதற்கு உன்னை முதலில் எங்களிடம் நிரூபித்தால் மட்டுமே ஆண்கள் அணிக்கு அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கின்றனர். அதற்கு நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என சௌந்தர்யா கேட்கும் போது, அது கூட உனக்கு தெரியவில்லையா எனக் கேட்கின்றனர். 

இதனால் கவலையடைந்த சௌந்தர்யா கதறி அழுகிறார். தான் எது செய்தாலும் தவறு எனக் கூறுகின்றனர் எனப் புலம்புகிறார். இந்த வீடியோ வெளியானதில் இருந்து பல ரசிகர்கள் சௌந்தர்யாவை கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் தொடங்கியதில் இருந்து சௌந்தர்யா சரியாக எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை. எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடாமல் அமைதியாக இருந்து வருகிறார். சில சமயங்களில் சோம்பேறியாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் வரும் வாரங்களில் இவர் நன்றாக விளையாடினால் மட்டுமே வீட்டிற்குள் இருக்க முடியும். ரசிகர்களின் மனம் கவரும் போட்டியாளர்கள் மட்டுமே இதுவரை நடந்த சீசன்களில் இறுதி வரை சென்றுள்ளனர். மேலும் இந்த வார நாமினேஷன் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.