சொம்பு தூக்கி அன்ஷிதா! அவார்ட் கொடுத்து அழுக வைத்த அர்ணவ்! அதிர்ச்சி ட்விஸ்ட்!
பிக்பாஸ் சீசன் 8 இன் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் அவார்ட் கொடுக்கும் டாஸ்க் நடந்துள்ளது.
தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 அன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என புது விதிமுறைகள், 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் உள் நுழைந்தனர். மேலும் இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சூடு பறக்க விவாதங்கள், பல பிரச்சனைகள் என இருந்து வந்தது. தற்போது இதன் 12 ஆம் நாளான இன்று மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் அவார்ட் வழங்கி கொள்கின்றனர்.
பிக்பாஸ் அவார்ட்ஸ்
தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோவில் முத்தக்குமாறான் அடுத்து செய்யப்போகும் ஷோ பிபி அவார்ட்ஸ் என டாஸ்க்கை படிக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் கார்டன் ஏரியாவில் கூடி ஒருவருக்கொருவர் அவர்கள் தேர்ந்தெடுத்த அவார்ட்டை கொடுக்கின்றனர். இதனை சில போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அவார்ட் பொருத்தமானது இல்லை என்பது போல பேசுகின்றனர்.
இதில் முதலில் பவித்ராவிற்கு ஆடியன்ஸ் வாச்சிங் ஆடியன்ஸ் என்ற ஆவார்தை ரஞ்சித் வழங்குகிறார். பின்னர் ஜெப்ரிக்கும் இதே ஆடியன்ஸ் வாச்சிங் ஆடியன்ஸ் அவார்டை பெண்கள் வழங்குகின்றனர். அதன் பின் பேசிய ஜெப்ரி என வாழ்நாளிலேயே இங்கு தான் அவார்ட் வாங்கியுள்ளேன் எனத் தெரிவிக்கிறார்.
பின்னர் ஜாக்குலினிற்கு எந்த பங்களிப்பையும் வழங்கவில்லை என டம்மி பாவா என்ற அவார்ட் கொடுக்கப்படுகிறது. அதற்கு இது தான் நான் என நினைத்து இருந்தீங்கனா? ப்ளீஸ் வேக் அப் எனத் தெரிவிக்கிறார். பின்னர் தர்ஷாவிற்கு டிராமா குயீன் என்ற அவார்ட் வழங்குகின்றனர். முத்துவிற்கு டம்மி பாவா என்ற அவார்டை தர்ஷா வழங்குகிறார். அதற்கு நான் எதை நினைத்தேனோ அதையே கொடுத்து உள்ளீர்கள் என முத்துக்குமரன் கூறுகிறார்.
சொம்பு தூக்கி அன்ஷிதா
அடுத்ததாக அர்ணவ் சொம்பு தூக்கி என்ற அவார்டை அன்ஷிதாவிற்கு வழங்குகிறார். அதனை சொல்லும் போதே மிகவும் குஷியாக சொம்பு தூக்கி எனக் கூறுகிறார். பின்னர் இதனை வாங்க வந்த அன்ஷிதா, உண்மையிலேயே நான் யாருணு ரொம்ப தெரிஞ்ச ஒருத்தர் கையில இருந்து வாங்குறேன் எனக் கூறுகிறார். அதன் பின் மிகவும் மணம் உடைந்து அழுகிறார்.
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து அடிக்கடி அர்ணவ் மற்றும் அன்ஷிதா ஆகியோரின் பெயர் மிகவும் பேசப்பட்டது வந்தது. அதற்கு காரணம் அர்ணவ் அவரது சொந்த வாழ்க்கையே. அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது குழந்தையை விட்டு விட்டு அன்ஷிதாவுடன் இருந்து வருகிறார் என வதந்தி பரவியது. மேலும் இவர்கள் இருவரும் பிரிவதற்கு அன்ஷிதா தான் காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது. இருவரும் இணைந்து செல்லம்மாள் சீரியலிலும் ஒன்றாக நடித்து வந்தனர். இருவரும் ஒன்றாக பிக்பாஸ் செல்கிறார்கள் என்றதும் சமூக வலைதளங்களில் இவர்களை பலர் எதிர்த்து பேசி வந்தனர். இந்நிலையில் இந்த புரோமோ பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியே. சில ரசிகர்கள் இதற்கு இருவரும் நன்றாக நடிக்கிறார்கள் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்