‘கிட்ட வாடா கர்லாக்கட்டை உடம்புக்காரா’.. பாடிபில்டிங்.. அப்பத்தா அன்பு.. நடிப்பு ஆர்வம்! - யார் இந்த சத்யா?
கர்லாக்கட்டை உடம்பு கொண்டவரான இவர், 2018ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலான ‘நீலக்குயில்’. சீரியலில் அறிமுகம் ஆனார் - யார் இந்த சத்யா?
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6 ) ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யா SK போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.
யார் இந்த சத்யா SK?
நடிகர் சத்யா SK ஜனவரி 3, 1993ல் சென்னையில் பிறந்தவர். 31 வயதாகும் இவருக்கு, சிறு வயது முதல் நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாம். அதனால், கனவை கைப்பற்ற,கல்லூரி படிக்கும் போது கிடைத்த மாடலிங்கில் களமிறங்கியவர், பாடிபில்டிங்கிலும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அது அவரது வாழ்க்கையை அடியோடு மாற்றியது. அதில், அவர் போட்ட உழைப்பு அவருக்கு பரிசுகளோடு, நடிப்பதற்கான வாய்ப்புகளையும் கொண்டு வந்தது.
2018ல் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பான சீரியல் ‘நீலக்குயில்’. இந்த சீரியலுக்காக புதுமுகங்களை தேடும் போது, அந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் சத்யா. ‘வேலைக்காரன்’ சீரியலில் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக வந்த சத்யா, அதிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
கட்டுமஸ்தான உடம்பு
கட்டுமஸ்தான உடம்பு, கட்டுப்பாடான நடிப்பு ஆகிய இரண்டும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளையும் கொண்டு வந்தது. குறிப்பாக, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் தொடரில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர் Zee தமிழில் ஒளிபரப்பான ‘அண்ணன்’ தொடரிலும் நடித்தார். பாடகியும், பிக்பாஸ் சீசன் 2 -ல் பங்கேற்றவருமான NSK Ramya ரம்யாவை திருமணம் செய்து இவருக்கு 2020 ம் ஆண்டு மகன் இருக்கிறான்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றி வரும் சத்யா SK, அடுத்ததாக நடிகர், நடன கலைஞர் பிரபு தேவா நடிப்பில் உருவாகும் ‘Musasi’ என்ற படத்தில் ஆக்ஷன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்