தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பஞ்சாயத்தை கூட்டிய பெண்கள்.. கொடுத்த வாக்க காப்பாத்த முடியாது.. பிக்பாஸ் வீட்டில் கலவரம்!

பஞ்சாயத்தை கூட்டிய பெண்கள்.. கொடுத்த வாக்க காப்பாத்த முடியாது.. பிக்பாஸ் வீட்டில் கலவரம்!

Oct 22, 2024, 01:27 PM IST

google News
ஆண்கள் அணியின் நாமினேஷன் பாஸை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்கள் அணியினர் சண்டையிட்டு வருகின்றனர்.
ஆண்கள் அணியின் நாமினேஷன் பாஸை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்கள் அணியினர் சண்டையிட்டு வருகின்றனர்.

ஆண்கள் அணியின் நாமினேஷன் பாஸை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்கள் அணியினர் சண்டையிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் சாச்சனா வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அருண் அவரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்துச் சென்றார். இதை பெண்கள் அணியினர் பார்த்துக் கொண்டிருந்ததால், அருண் சாச்சனாவிற்கு உதவினார்.

பஞ்சாயத்தை கூட்டிய பெண்கள்

இதை காரணமாக காட்டி அருண் பெண்கள் வீட்டிற்குள் அனுமதி இன்றி நுழைந்துள்ளார். மேலும், அவர் பிக்பாஸ் அழைக்காமல் கன்ஃபெஷன் ரூமிற்கு சென்றதால், ஆண்கள் கூறிய நாமினேஷன் டீல் கேன்சல் செய்யப்பட வேண்டும் என பெண்கள் அணியினர் கோரிக்கை வைக்கின்றனர். இதற்கு ஆண்கள் அணியினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். காரணம் அருண் தனது சொந்த தேவைக்காக கன்ஃபெஷன் ரூமிற்கு செல்ல வில்லை. உண்மையில் சாச்சனாவிற்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சென்றார் என அவர்கள் கூறுகின்றனர்.

விளக்கமளித்த ஆண்கள்

வலியால் துடித்த பெண்ணிற்கு உதவாமல் வேடிக்கை பார்த்து நின்றதால் கன்ஃபெஷன் ரூமிற்கு சென்றதாக அருண் கூறியுள்ளார்.

அதற்கு பெண்கள் அணி மறுப்பு தெரிவித்து, இங்கு இத்தனை பெண்கள் இருக்கிறோம் உதவமாட்டோமா என கேள்வி எழுப்புகின்றனர்.

வார்த்தையை காப்பாற்ற முடியாது

ஆண்கள் தரப்பிலிருந்து கொடுத்த விளக்கத்தை பெண்கள் அணியினர் ஏற்க மறுத்து வந்தனர். இதனால், கோபமான முத்துக் குமரன், கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது என்ற வார்த்தையை வந்த உடனே கூறியிருந்தால் இவ்வளவு தூரம் பேசி இருக்க வேண்டிய அவசியமே இல்லை என கூறினார். இதனால், கேப்டன் தர்ஷிகா இதற்கு என்ன பதில் கூற வேண்டும் எனத் தெரியாமல் முழுக்கிறார்.

திட்டமிட்டு நடக்கிறதா?

நடக்கும் இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, நாமினேஷன் பாஸை கேன்சல் செய்வதற்காக சாச்சனா போட்ட திட்டமா இது என பலருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

முன்னதாக சாச்சனா கடந்த வாரம் தண்டனை பெற்று ஹாலில் படுத்து தூங்கிய போது கூட சாச்சனா கீழே விழுந்துவிடாமல் இருக்க அருண் சோபாக்களை எல்லாம் அருகில் வைத்துவிட்டு சென்றிருப்பார். அப்படி உதவ வந்தவரை பயன்படுத்தி விளையாடுவது சரியஸல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இரு அணிகளும் செய்துகொண்ட டீல்

அதாவது, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாள் பெண்கள் மிகவும் வசதியாக இருக்கும் அறையை தேர்வு செய்தனர். அந்த அறை பெண்களுக்கு வேண்டும் எனில், பிக்பாஸ் வீட்டில் ஏதேனும் ஒரு வாரம் ஆண்கள் அணியில் உள்ள யார் பெயரையும் பரிந்துரைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், அது எந்த வாரம் என்பதை ஆண்கள் தான் முடிவு செய்வர் எனவும் கூறப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட பெண்கள் அணி ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளனர். அதன்படி, பிக்பாஸ் அழைக்காமல் ஆண்கள் வீட்டிலிருந்து யார் ஒருவர் கன்ஃபெஷன் ரூமிற்கு சென்றாலும் இந்த நாமினேஷன் பாஸ் முறை ரத்து செய்யப்படும் என்றனர்.

எதிராக திரும்பிய உதவி

இந்த விதிமுறைகளை இப்போது நினைவுபடுத்திய பெண்கள் அணியினர், சாச்சனாவிற்கு உதவ சென்ற அருண் பெண்கள் அணியிடம் அனுமதி வாங்கவில்லை. இதனை மிகவும் நல்ல செய்தியாக பார்க்கும் பெண்கள் அணி, ஆண்கள் அணியை வெச்சு செய்ய தயாராகி வருகின்றனர்.

பெண்கள் ஆலோசனை

அருண் ஏன் சாச்சனாவை கூட்டிக் கொண்டு போகவேண்டும். கூட்டிக் கொண்டு போய் விட இது என்ன என கேள்வி எழுப்புகிறார் ஆனந்தி. அதே சமயத்தி்ல அருண் கன்ஃபெஷன் ரூமிற்கு சென்றதால், நாமினேஷன் பாஸ் கேன்சல் செய்யப்படும் என பேசி வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி