விஸ்வாசமா இருக்கணும்.. தேவையான இன்ஃபெர்மேஷன் குடுப்பேன்.. பரபரப்பாக தொடங்கும் பிக்பாஸ் 3வது வாரம்
பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்தில் ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும், பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும் அணி மாறி விளையாட உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 8ன் 15வது நாளான இன்று, 3 வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது, இந்தமுறை போட்டியாளர்கள் ஆண்கள் அணி, பெண்கள் அணி என எந்த வேறுபாடும் இல்லாமல் நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்தது. இதையடுத்து தற்போது, ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும், பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும் வீடு மாறி சென்று தங்களது அணிக்காக விளையாடச் சென்றுள்ளனர்,
அணி மாறும் போட்டியாளர்கள்
முதல் வாரத்தில் பவித்ரா பெண்கள் அணியிலிருந்தும், முத்துக்குமரன் ஆண்கள் அணியிலிருந்தும் அணி மாறி விளையாடினர். இந்த சமயத்தில் பவித்ரா ஆண்களின் நாமினேஷனுக்கு உதவியதாக பெண்கள் அணியினர் குற்றச்சாட்டை வைத்தனர்.
இதையடுத்து, 2ம் வாரம் அணி மாறிய தர்ஷா குப்தா வந்த முதல் நாளே தனது ஆட்டத்தை ஆரம்பித்ததால் ஆண்கள் அணியினர் பெரும்பாலும் தங்களின் ஆலோசனையின் போது தள்ளியே வைத்திருந்தனர். இதனால் அணிக்குள் ஏகப்பட்ட கலவரமும் நடந்தது.