சோலி முடிஞ்சது.. வயிற்று வலிக்கு உதவ நினைத்து ஆட்டத்தை கலைத்த அருண்.. சம்பவம் செய்ய காத்திருக்கும் பெண்கள்
சாச்சனாவிற்கு உதவ நினைத்து அருண் அனுமதியின்றி பெண்கள் அணிக்குள் வந்ததால், ஆண்கள் அணியின் நாமினேஷன் பாஸ் ரத்து செய்யப்படும் என பெண்கள் அணி கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டின் 3வது வாரம் நேற்று தொடங்கிய நிலையில், பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும், ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும் வீடு மாறி சென்று விளையாடி வருகின்றனர்.
வந்த அடுத்த நாளே வயிற்று வலி
பெண்கள் வீட்டிலிருந்து கிளம்பும் முன்னே, ஆண்கள் அணியில் நடக்கும் அனைத்து தகவல்களையும் உங்களுக்குத் தருவேன் என சாச்சனா கூறி வந்தார். இந்நிலையில் ஆண்கள் அணியில் சேர்ந்த அடுத்த நாளே, கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டதாக அணியில் இருப்பவர்களிடம் கூறுகிறார்.
பரிதாபப்பட்ட அருண்
இவர் வலியில் துடிப்பதைக் கண்ட அருண் பரிதாபப் படுகிறார். மேலும், பிக்பாஸ் சாச்சனாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த நிலையில் சாச்சனாவை தாங்கிப் பிடித்து அருணும் கன்ஃபெஷன் ரூமிற்கு செல்கிறார். இந்நிலையில், பெண்கள் அணியின் அனுமதியைக் கேட்காமல் அருண் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பெண்கள் அணியினர் திட்டமிட்டு வருகின்றனர்.