'மனசாட்சி இருக்கா' கண்ணீர் வடித்த சாச்சனா.. வெடித்தது சண்டை.. குமுறும் பெண்கள் அணி!
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட சமையல் டாஸ்க்கால் பெண்கள் அணி கூட்டு சேர்ந்து ஆண்கள் அணியிடம் சண்டையிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8ன் 9ம் நாளுக்கான 2வது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சமைப்பது யார்?
பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரித்த நாளில் இருந்த சண்டை ஓயாமல் இருக்கிறது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் மொத்த போட்டியாளர்களுக்கு சமைப்பது யார் என ஆண்கள் அணி முடிவு செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறியுள்ளது. இதையடுத்து, பெண்கள் அணியைச் சேர்ந்த ஜாக்குலினும், சாச்சனாவும் இணைந்து அத்தனை போட்டியாளர்களுக்கும் சமைக்க வேண்டும். அத்துடன் அவர்களே சமைத்த பாத்திரங்களை கழுவியும் வைக்க வேண்டும் என ஆண்கள் அணியினர் கூறியுள்ளனர்.
ஆரம்பித்த சண்டை
இதனால், கடுப்பான பெண்கள் அணி, இரண்டு பேரால் எப்படி இத்தனை வேலைகளையும் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி ஆண்கள் அணியிடம் சண்டையிட்டுள்ளனர். இதுதான் டாஸ்க் இப்படித் தான் விளையாட வேண்டும் என ஆண்கள் அணியினர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.