தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Allu Arjun: கைது இல்லை.. வெறும் விசாரணை மட்டும்தான்.. நடந்தது இதுதான்! அல்லு அர்ஜுன் தரப்பில் விளக்கம்

Allu Arjun: கைது இல்லை.. வெறும் விசாரணை மட்டும்தான்.. நடந்தது இதுதான்! அல்லு அர்ஜுன் தரப்பில் விளக்கம்

Dec 13, 2024, 02:31 PM IST

google News
சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசல் பெண் உயிரிழந்த வழக்கில் டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. போலீசார் அவரை கைது செய்து சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.
சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசல் பெண் உயிரிழந்த வழக்கில் டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. போலீசார் அவரை கைது செய்து சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.

சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசல் பெண் உயிரிழந்த வழக்கில் டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. போலீசார் அவரை கைது செய்து சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக புஷ்பா 2 கடந்த 5ஆம் தேதி வெளியானது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் இரவு பிரீமியர் ஷோ ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்த காட்சியை காண அல்லு அர்ஜுன் வருவதாக வந்த தகவலை அடுத்த ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அல்லு அர்ஜுன் கைது வதந்தி என புஷ்பா 2 படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாக உலா வரும் செய்திகள் உண்மையில்லை என அல்லு அர்ஜுன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்

புகைப்படங்கள், விடியோக்களால் பரவிய வதந்தி

அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. அதேபோல் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், சகோதரர் சிரிஷ் மற்றும் அல்லு அர்ஜுனின் மாமா சந்திரசேகர் ரெட்டி ஆகியோர் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மூன்று பேர் கைது

புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சிகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே தெலுங்கு மாநிலங்களில் திரையிடப்பட்டது. அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் புஷ்பா 2 பிரீமியரை பார்க்க ஆரிடிசி கிராஸ்ரோடில் உள்ள சந்தியா திரையரங்குக்கு வந்துள்ளார். அல்லு அர்ஜுன் வருவதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை காண முண்டியடித்து கொண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவரும், அவரது 8 வயது மகனும் சிக்கினர்.

இதில் நெரிசலில் சிக்கிய ரேவதி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழ்ந்தார். அதேபோல் அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தியா திரையரங்க மேலாளர் மற்றும் பாதுகாப்பு மேலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் திரையரங்க ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்குக்கு வருவது குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படாததாலும், திரையரங்கு உரிமையாளரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அல்லு அர்ஜுன் மீது வழக்கு

ரசிகர் மரணம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது ஐபிசி 105 மற்றும் 118 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "திரையரங்குக்கு வருவதை முன்கூட்டியே காவல்துறைக்கும், திரையரங்கு உரிமையாளருக்கும் தெரிவித்தேன். தான் வந்ததால் திரையரங்கில் நெரிசல் ஏற்பட்டது என்று கூறுவது சரியல்ல" என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், "தன் மீதான இந்த வழக்கு தனது கெளரவத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்திருப்பதாகவும், தன் மீதான கைது நடவடிக்கையை தடுத்து, தனது பெயரை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்" என்றும் மனுவில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முழு ஆதரவு

தன் மீதான இந்த வழக்கு காரணமாக புஷ்பா 2 படத்தின் வெற்றியை அல்லு அர்ஜுனால் கொண்டாட முடியவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக, இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு முழு ஆதரவும் அளிப்பதாக அல்லு அர்ஜுன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, ரூ. 25 லட்சமும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணான ரேவதி மகனின் மருத்துவமனை செலவு மற்றும் அவரது படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் அல்லு அர்ஜுன் கூறினார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி