ரேவதி வைத்த கண்டிஷன்.. அபிராமிக்கு காத்திருந்த குட் நியூஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரேவதி வைத்த கண்டிஷன்.. அபிராமிக்கு காத்திருந்த குட் நியூஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

ரேவதி வைத்த கண்டிஷன்.. அபிராமிக்கு காத்திருந்த குட் நியூஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 12, 2024 12:39 PM IST

கார்த்திக் விரைவில் சொந்தத்திலே ஒரு பெண்ணை திருமணம் செய்வார் என ஜோசியர் சொன்னதால் அந்தப் பெண் ரேவதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அபிராமி இருக்கிறார்.

ரேவதி வைத்த கண்டிஷன்.. அபிராமிக்கு காத்திருந்த குட் நியூஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
ரேவதி வைத்த கண்டிஷன்.. அபிராமிக்கு காத்திருந்த குட் நியூஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

ரேவதியின் கண்டிஷன்

அதாவது, ரேவதி தனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்.. ஆனால் ஒரு கண்டிஷன் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி என்ன அது என்று கேள்வி கேட்கிறாள். நீங்க சொல்றவரை நான் கல்யாணம் பண்ணிக்கறேன், ஆனால் நீங்க அப்பாவை அவங்க அப்பா அம்மா ஊருக்கு அனுப்பி வைக்கணும் என்று சொல்கிறாள்.

இதை கேட்டு அதிர்ச்சியாகும் சாமுண்டேஸ்வரி அதெல்லாம் முடியவே முடியாது.. வாய்ப்பே இல்லை என்று சொல்ல பிளாஸ்கட்டில் கார்த்திக் தான் இப்படியொரு ஐடியாவை கொடுத்தான் என்பது தெரிய வருகிறது. இந்த சமயத்தில் கார்த்திக் இடையில் புகுந்து நீங்க ஒரு விஷயத்தை சொல்லும் அவங்க ஒரு விஷயத்தை கேட்கிறாங்க.. இதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்கிறான்.

சாமுண்டேஸ்வரி ஆர்டர்

ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி ரேவதியின் கண்டிஷனுக்கு ஓகே சொல்கிறாள். ஆனால் உன் கல்யாணம் முடிந்த பிறகு தான் உன் அப்பாவை அனுப்பி வைப்பேன் என்று சொல்ல ரேவதி சம்மதம் சொல்கிறாள். உடனே நிச்சயத்துக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி சாமுண்டேஸ்வரி ஆர்டர் போடுகிறாள்.

அடுத்து சாமுண்டீஸ்வரியும் கார்த்தியும் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாமுண்டேஸ்வரி காரை சிவனாண்டி வீட்டிற்கு விட சொல்கிறாள். அடுத்து சிவனாண்டி வீட்டிற்கு சென்று என் பொண்ணுக்கு நிச்சயம்.. நீயும் உங்க அம்மாவும் வந்துடுங்க என அழைப்பு கொடுத்து வெறுப்பேற்றுகிறாள்.

அபிராமியின் சந்தேகம்

இங்கே அபிராமி கார்த்தியின் ஜாதகத்தை காட்டி ஜோதிடர் ஒருவரிடம் பலன் கேட்க அவர் இந்த ஜாதகக்காரரோட முதல் மனைவி இறந்து இருப்பாங்க.. கூடிய சீக்கிரம் சொந்தத்திலேயே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்ல அதை கேட்டு அது ரேவதியாக தான் இருக்கும் என சந்தோசப்படுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ஜோசியக்காரர் வைத்த சூனியம்

முன்னதாக ஜோசியக்காரர் உங்களை சுத்தி வஞ்சகம் நிறைந்து இருக்கு.. ஆனால், உங்களுக்கு பின்னாடியே உங்க காவல் தெய்வம் இருக்கு.. அதை மட்டும் விட்டுடாதீங்க, அந்த காவல் தெய்வம் இருக்கும் வரை உங்களுக்கு ஒண்ணுமே ஆகாது என்று சொல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள்.

அதன் பிறகு ஜோசியர் எல்லாருடைய ஜாதகத்தையும் வாங்கி பார்க்கிறார். ரேவதியின் ஜாதகத்தை பார்த்து விட்டு இந்த ஜாதகத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சா பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார். ஜோசியர் சொன்னதை கேட்ட ரேவதி அப்செட்டாகி உள்ளே சென்று விட ஸ்வேதாவை அனுப்பி ரேவதியை அழைத்து வர சொல்கிறாள் சாமுண்டீஸ்வரி.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.