தட்டித்தூக்கும் அல்லு அர்ஜூன்.. தவிடு பொடியாகும் பாக்ஸ் ஆபிஸ்.. புஷ்பா 2 வசூல் எவ்வளவு தெரியுமா?
புஷ்பா 2 படம் வசூல் செய்த விபரங்கள் குறித்து பார்க்கலாம்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, சுகுமார் இயக்கி அண்மையில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ள சாதனைகளை இங்கே பார்க்கலாம்.
ஹிந்தியில் டாப் வசூல்
புஷ்பா 2 படம் வெளியாகி 8 நாட்கள் கடந்து இருக்கும் நிலையில், வெளியிட்ட எல்லா மொழிகளிலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. குறிப்பாக, ஹிந்தியில் இதற்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற கே. ஜி. எஃப் மற்றும் பாகுபலி 1 ஆகிய படங்கள் வசூலித்த மொத்த வசூலை புஷ்பா 2 முறியடித்து இருக்கிறது. கடந்த 8 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் ஹிந்தியில் மட்டும் தோராயமாக 435 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. இன்னும் புஷ்பா 2 திரைப்படம் 75.5 கோடி வசூல் செய்தால், பாகுபலி 2 படத்தின் வசூலான 511 கோடியை தாண்டி விடும். அப்படி தாண்டும் பட்சத்தில் ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக புஷ்பா 2 மாறும்.
புஷ்பா 2
இந்தியாவில் மட்டும் புஷ்பா 2 திரைப்படம் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது. ஆம், நேற்று முன்தினம் இந்தியாவில் 43.3 கோடி வசூல் செய்த புஷ்பா 2 திரைப்படம் நேற்றைய தினம் 37.79 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்தியாவில் மொத்தமாக 726 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம், தெலுங்கில் 241. 9 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 41 கோடி வசூல் செய்த புஷ்பா 2 திரைப்படம், உலக அளவில் 1000 கோடியை வசூலித்து இருக்கிறது. இதன் மூலமாக, புஷ்பா 2 திரைப்படம் அதிவேகமாக ஆயிரம் கோடியை வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
புஷ்பா 2 படம் செய்த சாதனைகள்
அல்லு அர்ஜுன் கெரியரில், படம் வெளியான அன்றைய தினமே 100 கோடி வசூலித்த படமாக மாறி இருக்கும் புஷ்பா 2, ராஷ்மிகா மற்றும் பகத் பாசில், சுகுமார் ஆகியோரது கெரியரிலும், அதே சாதனையை படைத்து இருக்கிறது.
தலா 50 கோடி..
படம் வெளியான அன்றைய தினம், ஹிந்தியில் 72 கோடியும் தெலுங்கில் 92 கோடியும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கில், ஆர் ஆர் ஆர் திரைப்படம் படம் வெளியான அன்றைய தினம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
ஆனால், இந்தியாவில் இதற்கு முன்னதாக வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஓபனிங் டே வசூலை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்து விட்டது.
ஹிந்தியில் இதற்கு முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஓபனிங் டே வசூலை முறியடித்து, புஷ்பா 2 திரைப்படம் 72 கோடி வசூல் செய்து இருக்கிறது.
அதேபோல கன்னடத்தில் உருவாகி வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கேஜிஎப் 2 திரைப்படத்தின் ஓப்பனிங் கலெக்ஷனான 53 கோடியை விட அதிகமாக வசூல் செய்து, டப் செய்து வெளியிடப்பட்ட படங்களின் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம் மாறி இருக்கிறது. பாகுபலி, ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் 2 திரைப்படங்கள் மூன்று நாட்களில் 400 கோடியே கடந்து வசூல் சாதனை புரிந்தன. ஆனால் புஷ்பா 2 நாட்களிலேயே 400 கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்