தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துடீங்களே.. ரூ. 150 கோடி நஷ்ட ஈடு? ரிலீசுக்கு முன்னரே சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி

மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துடீங்களே.. ரூ. 150 கோடி நஷ்ட ஈடு? ரிலீசுக்கு முன்னரே சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி

Dec 04, 2024, 11:17 AM IST

google News
ரிலீசுக்கு முன்னரே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி படக்குழு, ரூ. 150 கோடி நஷ்ட ஈடு கோட்டு நேட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
ரிலீசுக்கு முன்னரே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி படக்குழு, ரூ. 150 கோடி நஷ்ட ஈடு கோட்டு நேட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

ரிலீசுக்கு முன்னரே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி படக்குழு, ரூ. 150 கோடி நஷ்ட ஈடு கோட்டு நேட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அஜித்குமார் நடிப்பில் நீண்ட நாள்களாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீஸர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாள்கள் மட்டும் ஷுட்டிங் எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடைய தற்போது விடாமுயற்சி படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. காப்புரிமை சட்டத்தை மீறியதாக படக்குழுவினர் மீது ரூ. 150 கோடி நஷ்டஈடு கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஹாலிவுட் படத்தின் ஹாப்பி

அஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருந்து வரும் விடாமுயற்சி படம், 1997இல் வெளியான ஹாலிவுட் படமான ப்ரேக்டவுன் படத்தின் ரீமேக்காக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி பட டீஸரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், ப்ரேக்டவுன் படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் பலரும் ஸ்கீரின்ஷாட்களையும், விடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

ரூ. 150 கோடி நஷ்டஈடு

இதையடுத்து ப்ரேக்டவுன் படத்தின் உரிமையை வைத்திருக்கும் ஹாலிவுட் நிறுவனமான பாராமவுண்ட் பிக்சர்ஸ், காப்புரிமை விதியை மீறியதாக விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைக்கா புரொடக்‌ஷனிடம் ரூ. 150 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பற்றி படக்குழுவினர் மற்றும் லைக்கா நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

விடாமுயற்சி படக்குழு மீதான இந்த குற்றச்சாட்டும், அதற்கு இழப்பீடு கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரேக்டவுன் கதை

திருமணமான தம்பதிகள் காரில் பயணம் செய்கிறார்கள். தொலைதூரம் சென்ற பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் பழுதடைகிறது. அப்போது அந்த பாதையில் வரும் லாரி டிரைவர் தம்பதியரிடம் சில கிலோமீட்டர் தொலைவில் தொலைபேசி பூத் இருப்பதாகவும், அங்கு உதவி பெறலாம் என கூறுகிறார். மனைவி லாரி ட்ரைவருடன் அனுப்பி, ஹீரோ உதவிக்காக காத்திருக்க அதன் பின்னர் பரபரப்பான திருப்பங்களே ப்ரேக்டவுன் படத்தின் கதை.

இதையடுத்து விடாமுயற்சி கதை என்று இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் கதையும் ப்ரேக்டவுன் படத்தில் வருவது போலவே அமைந்துள்ளது. இருப்பினும் விடாமுயற்சி படக்குழு தரப்பில் இதுபற்றி எந்த கருத்துகளும் இதுவரை வெளியாகமல் உள்ளது.

விடாமுயற்சி படம்

கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்குமார் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், ரெஜினா காசண்ட்ரா, பிக் பாஸ் புகழ் ஆரவ் உள்பட பலரும் நடிக்கிறார்கள். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் வெளியான படத்தின் டீஸர் வசனங்கள் ஏதும் இல்லாமல் அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகளோடு, ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் இருந்தது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி