மிரட்டும் விடாமுயற்சி டீஸர்..சூர்யா படத்துக்கு வந்த சிக்கல், தம்பதிகள் ஆன பிரபலங்கள் - டாப் சினிமா செய்திகள் இன்று
மிரட்டும் விடாமுயற்சி டீஸர், சூர்யா படத்துக்கு வந்த சிக்கல், தம்பதிகள் ஆன பிரபலங்கள், வரி ஏய்ப்பு புகாரில் சிக்கய கூலி பட நடிகர் என டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

ரிலீசானது விடாமுயற்சி டீஸர்
அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படம் பொங்கல் 2025 வெளியீடாக திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியானது வித்யாசாகரின் அஷ்ட ஐயப்ப அவதாரம் ஆல்பம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் வித்யாசாகரின் முதல் பக்தி ஆல்பமாக அஷ்ட ஐயப்ப அவதாரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் முழுக்க முழுக்க ஐயப்பனைப் பற்றிய மலையாள பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆல்பத்தில் ஒரு பாடல் பிரபல பாடகி சின்னக்குயில் சித்ரா பாடியுள்ளார்.
தம்பதிகள் ஆன சீரியல் பிரபலங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி. இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு தொடர் சிறகடிக்க ஆசை. இதில் நாயகனாக நடித்து வருபவர் வசந்த். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தனர்.