லீக் ஆன வேட்டையன் கதை.. ட்ரெயிலர்ல வந்தது சும்மாவாம்.. ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்..
Oct 05, 2024, 09:02 AM IST
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன் படத்தின் கதை லீக் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். தர்பார் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்திலும் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இயக்குநரின் சம்பவம்
உண்மைக் கதைகளையும், சமூக அவலங்களையும் திரையில் கொண்டுவர நினைக்கும் இயக்குநர் த.செ. ஞானவேல், இந்தப் படத்தில் என்கவுண்டர் குறித்து பேச வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, சமீபத்தில் வெளியான ட்ரெயிலரும் அதையே தான் பிரதிபலித்துள்ளது. இந்நிலையில், சினிமா வட்டாரத்தில் சிலர் ட்ரெயிலரில் காட்டியவாறு வேட்டையன் படம் உண்மையில் இருக்காது. படம் கல்வி மாஃபியாக்களை குறிவைத்து எடுக்கப்பட்டது எனவும் கூறி வருகின்றனர்.
ட்ரெயிலரும் படமும் ஒன்றல்ல
வேட்டையன் ட்ரெயிலரை பொருத்தவரை, போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிகாந்த், குற்றவாளியை பிடிப்பது தொடர்பாக எடுக்கும் முயற்சிகளை நீதிபதியாக வரும் அபிதாப் பச்சன் கேள்வி எழுப்புவது போன்று இருக்கும்.
ஆனால், உண்மையில் வேட்டையன் படம், நடிகை துஷாரா விஜயனை சுற்றிதான் நடக்கிறதாம். படத்தில் ஆசிரியாக வரும் அவரை, ராணா டகுபதி கொலை செய்வதால் நடக்கும் கதை தான் மொத்த படமாக உள்ளது எனவும் கூறுகின்றனர். அத்துடன் இந்தப் படத்தில் அரசு பள்ளி மற்றும் கல்வி மாஃபியாக்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை ஆழமாக இயக்குநர் கூறியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
பிளாக் பஸ்டர் ஆகுமா?
பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை சமூகத்தின் முன் வெளிச்சம் போட்டு காட்டிய திரைப்படம் ஜெய்பீம். இந்தத் திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து தரமான சம்பவத்தை செய்துள்ள இவர், நிச்சயம் நடிகர் ரஜினி காந்த்தை வைத்து சிறப்பான கதையை மக்களுக்கு வழங்குவார் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அத்துடன், பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என இந்திய சினிமா நடிகர்கள் அதாவது, நடிகர் ரஜினி காந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளதால் நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிளாக் பஸ்டர் வெற்றி பெறும் எனவும் கூறிவருகின்றனர்.
லைகாவிற்கு நெருக்கடி
இது ஒருபுறம் இருக்க, வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளியான படம் தர்பார். இந்தப் படம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறாததால், படம் நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், தர்பார் படத்தின் நஷ்டத்தை சரிசெய்யுமாறு கூறி, வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் கேட்க உள்ளனராம். இதனால், படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ளனராம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்