Vettaiyan Trailer: மூளை இருந்தா போதும்.. 3 நாளுல முடிச்சிருவேன்.. என்கிட்ட இருந்து தப்ப முடியாது.. தெரிக்கும் வேட்டையன்-actor rajinikanth vettaiyan movie trailer out now - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vettaiyan Trailer: மூளை இருந்தா போதும்.. 3 நாளுல முடிச்சிருவேன்.. என்கிட்ட இருந்து தப்ப முடியாது.. தெரிக்கும் வேட்டையன்

Vettaiyan Trailer: மூளை இருந்தா போதும்.. 3 நாளுல முடிச்சிருவேன்.. என்கிட்ட இருந்து தப்ப முடியாது.. தெரிக்கும் வேட்டையன்

Malavica Natarajan HT Tamil
Oct 02, 2024 06:58 PM IST

Vettaiyan Trailer: ஜெயலர் படத்திற்குப் பின் மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரஜினி, ஒரு வாரம் ரொம்ப அதிகம்... 3 நாள் போதும்.. என்கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது என மாஸ் வசனம் பேசி வேட்டையன் படத்தில் மக்களை கவர்கிறார்.

Vettaiyan Trailer: மூளை இருந்தா போதும்.. 3 நாளுல முடிச்சிருவேன்.. என்கிட்ட இருந்து தப்ப முடியாது.. தெரிக்கும் வேட்டையன்
Vettaiyan Trailer: மூளை இருந்தா போதும்.. 3 நாளுல முடிச்சிருவேன்.. என்கிட்ட இருந்து தப்ப முடியாது.. தெரிக்கும் வேட்டையன்

பரபரப்பை ஏற்படுத்திய வேட்டையன்

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினி, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது போன்றும், அதற்காக காவலர்களுடன் ஆலோசனை நடத்துவது போன்றும், நீதிபதியிடம் உரையாடுவது போன்றும் விறுவிறப்பான காட்சிகளுடன் வந்துள்ளது வேட்டையன் ட்ரெயிலர். பெண்கள் பாதுகாப்பு, திருடன், எண்கவுண்டர், அநீதி என பல ஏரியாக்களில் வேட்டையன் படம் பயணிக்கிறது என ட்ரெயிலர் மூலம் ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் துள்ளலான இசையினால் இளைஞர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடம் உள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

170வது படத்திலும் மாஸ் காட்டும் ரஜினி

நடிகர் ரஜினி காந்த்தின் 170வது படமான வேட்டையனை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், படக்குழு அப்டேட் மேல் அப்டேட்டாக வழங்கி வருகிறது. அந்த வகையில், திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்களையும் படத்தில் அவர் எந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதையும் இதுவரை வெளியிட்டது.

வேட்டையன் கேரக்டர்கள்

அந்த அறிவிப்பின் படி, நடிகர் அமிதாப் பச்சன், சத்யதேவ் என்ற கதாபாத்திரத்திலும் மஞ்சு வாரியர், தாரா என்ற கதாபாத்திரத்திலும் ஃபகத் ஃபாசில், பேட்ரிக் என்ற கதாபாத்திரத்திலும் ரித்திகா சிங், ரூபா என்ற கதாபாத்திரத்திலும் அபிராமி, ஸ்வேதா என்ற கதாபாத்திரத்திலும் கிஷோர், ஹரிஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்தின் டீசரை வைத்துப் பார்க்கும் போது இது என்கவுண்டர் குறித்து விரிவாக பேசும் படமாக அமையலாம் என பலரும் கூறி வந்தனர்.

ரிலீஸான மாஸ் ட்ரெயிலர்

இந்நிலையில், மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்த வேட்டையன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் மூலம், ரஜினி போலீசாகவும், அமிதாப் பச்சன் நீதிபதியாகவும் நடித்துள்ளது தெரிகிறது. மேலும்,

இங்க பொன்னுங்களுக்கு பாதுகாப்பே இல்ல. பொறுக்கிங்களுக்கு தான் பாதுகாப்பு.. இந்த மாதிரி பொறுக்கிங்கள எண்கவுண்டர் தான் பண்ணனும்.. குற்றவாளியை கண்டுபிடிக்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. இன்னும் ஒரு வாரத்துல எண்கவுண்டர் பண்ணியே ஆகனும்.. ஒருவாரம் ரொம்ப அதிகம் 3 நாளுல டிபார்ட்மெண்டக்கு நல்ல பேர் வரும்.. போதும்.. திருடன்னா முகமுடி போட வேண்டாம். கொஞ்சம் மூளை இருந்தா போதும். பேசிப் புரியோஜனம் இல்ல.. தூக்குவோம்.. ஒரு அநீதியை இன்னொரு அநீதியால வெல்ல முடியாது.. நீங்க என் எங்க தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான்.. என்கிட்ட இருந்து யாராலையும் காப்பாத்த முடியாது போன்ற வசனங்கள் படத்தின் கதையை யூகிக்க வைக்கிறது.

இந்தப் படம் பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகள் தொடர்பாக இருக்கலாம் எனவும், இந்த கருத்தை போலீசார் எவ்வாறு எசுத்துச் செல்கின்றனர் என்பது குறித்தும் படம் இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் ட்ரெயிலர் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகம் பேர் ட்ரெயிலரை பார்த்து வருகின்றனர்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

முன்னதாக இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் பழங்குடி மக்களின் துயர்களை எடுத்துக்கூறும் விதமாக அமைந்தது. மேலும், இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இத்திரைப்படம் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் ரஜினியை போலீசாக வைத்து படம் எடுத்து வரும் நிலையில், இந்தப் படமும் ஏதேனும் சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Whats_app_banner