தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vishal: ‘இந்தியன் 2 ஃப்ளாப் ஆனா என் நிலைமை? அவங்க சொத்துக்களை முடக்க உத்தரவிடனும்’ - லைகா மீது விஷால் வழக்கு!

Actor Vishal: ‘இந்தியன் 2 ஃப்ளாப் ஆனா என் நிலைமை? அவங்க சொத்துக்களை முடக்க உத்தரவிடனும்’ - லைகா மீது விஷால் வழக்கு!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 02, 2024 06:46 PM IST

சண்டக்கோழி -2 படத்திற்கான ஜி.எஸ்.டி தொகையை தனக்கு கொடுக்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களை முடக்க வேண்டும் என்று நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

லைகா புரடொக்‌ஷன் மீது விஷால் வழக்கு!
லைகா புரடொக்‌ஷன் மீது விஷால் வழக்கு!

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் , “விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சண்டக்கோழி 2 படத்தை தயாரித்தது. 

இந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான திரையரங்கம் மற்றும் சாட்டிலைட் உரிமையை லைகா நிறுவனம் பெற, கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

ஆனால், அந்தத் தொகைக்கான 12 சதவிகித ஜி.எஸ்.டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தாத காரணத்தால், அபராரதத் தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்சம் ரூபாயை நான் செலுத்தினேன். அதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். 

இப்போது லைகா நிறுவனம், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி 500 கோடி பொருட்செலவில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறது. 

அந்தப்படம் தோல்வி அடைந்தால், லைகா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் என்னுடைய பணம் திரும்ப தனக்கு கிடைக்குமா? என்ற பயம் இருக்கிறது. 

அத்துடன்,லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால், தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே நான் செலுத்திய ஜி.எஸ்.டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5.24 கோடி ரூபாயை திருப்பித் தருவதற்கான உத்தரவாதத்தை கொடுக்க, லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் இந்த வழக்கு முடியும் வரை RBL வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும்" என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்பாக லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்