தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Love Today Hindi Remake: இந்தி லவ் டுடே படத்தில் இணையும் பாலிவுட் வாரிசுகள்

Love Today Hindi Remake: இந்தி லவ் டுடே படத்தில் இணையும் பாலிவுட் வாரிசுகள்

Mar 25, 2023, 08:33 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் லவ்டுடே. பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கியிருந்த இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரித்தில் நடித்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Namitha: ஒரே படத்தில் ஒன்றாக நடித்தாலும் நமீதாவுடன் பேச மறுத்த நயன்தாரா.. காரணம் என்ன?

Actor Pandu Memorial Day: ‘ஆங்’ என்ற மேனரிசத்தால் ஈர்த்த நடிகர் பாண்டு.. மறுபக்கம் இரட்டை இலையை வடிவமைத்தவர்!

காமராஜர் பாராட்டிய படம்.. 175 நாட்கள் ஓடி வசூல் சாதனை.. 52ஆம் ஆண்டில் பட்டிக்காடா பட்டணமா

Urvashi Love Story: பாதியில் விட்டுச்சென்ற முதல் கணவர்.. ஓரவஞ்சனை காட்டிய கோலிவுட்.. ஊர்வசி காதல் முறிந்த கதை!

இன்றைய இளைஞர்களுக்கு இடையிலான காதல், மோதலையும், அவர்கள் தங்களது மொபைல் போன்களை பறிமாற்றிக்கொண்டால் நிகழும் அக்கப்போர்களையும் காமெடியுடன் கலந்து சுவாரஸ்யமான கதைகளத்தை கொண்டதாக இந்தப் படம் அமைந்திருந்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. வெறும் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ. 100 வரை பாக்ஸ் ஆபிஸில் வசூதித்ததாக கூறப்படுகிறது.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றொரு ப்ளஸாக இருந்தது. இதில் இடம்பிடித்த மாமாகுட்டி என்ற பாடல் டிரெண்டிங்கில் டாப்பில் இருந்ததுடன், தற்போது வரையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் படத்தில் இடம்பிடித்த காட்சிகளின் ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் இப்போதும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

லவ்டுடே திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா, தெலங்கானாவில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அங்கும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தகள் நடைபெற்று வந்த நிலையில், படத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

பாலிவுட்டில் உருவாக இருக்கும் லவ்டுடே இந்தி ரீமேக்கை பாந்தோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாலிவுட் கான்களில் ஒருவரான ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் கதாநாயகனாகவும், பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளுமான குஷி கபூர் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்கள்.

ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஏற்கனவே மகாராஜா என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், வெளியீட்டுக்காக காத்துகிடக்கிறது. இதேபோல் ஸோயா அக்தர் இயக்கிய, தி ஆர்சிஸ் என்ற படத்தில் குஷி கபூரும் நடித்துள்ளார்.

இதையடுத்து இந்த வாரிசுகளின் இரண்டாவது படமாக லவ்டுடே இந்தி ரீமேக் உருவாகிறது. படத்தில் இடம்பிடிக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.